ஆட்சி அமைக்கும் நோக்கம் இல்லை - சரத் பவார் !!

  அபிநயா   | Last Modified : 06 Nov, 2019 02:50 pm
maharashtra-deadlock-pawar-rules-out-playing-role-in-govt-formation-says-ncp

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பது நல்ல தீர்வு என்று கூறிவந்த சிவசேனா கட்சி பேச்சாளர் சஞ்சய் ராவுத்திற்கு எதிராக, ஆட்சி அமைக்கும் நோக்கம் தனக்கு சிறிதும் இல்லை என்று கூறியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்.

மகாராஷ்டிரா மாநில தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் பாஜக-சிவசேனா கூட்டணி இடையே முதலமைச்சர் பதவியில் யார் அமர்வது என்பது குறித்த கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வருவதால், இன்று வரை ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து தங்களால் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறி வந்த சிவசேனாவின் கருத்துக்கு தற்போது பதிலளித்து உள்ளார் சரத் பவார்.

"நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்பியிருந்தால் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், மக்கள் நலனில் அக்கறை கொண்ட, ஆளும் கட்சியின் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிர்கட்சியாகவே எங்களை பார்க்க விரும்புகின்றனர் மகாராஷ்டிரா மக்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றவே நாங்கள் விரும்புகின்றோம்" என்று கூறியுள்ளார் அம்மாநில மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார்.

மேலும், தற்போதைய நிலையில், ஆட்சி அமைக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும், அடுத்த 3 நாட்களில் தான் பூனே செல்லவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close