சிவசேனா கட்சிக்கு முதலமைச்சர் பதவி தருவதாக இருந்தால் மட்டும் என்னை அழையுங்கள்: பாஜகவுக்கு தாக்கரே அறைகூவல்!!!

  அபிநயா   | Last Modified : 07 Nov, 2019 04:38 pm
call-me-if-ready-to-give-cm-s-post-otherwise-don-t-uddhav-to-bjp

மகாராஷ்டிரா : தேர்தலை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கும் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணியிடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதை தொடர்ந்து, பாஜகவின் கருத்துக்களுக்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் பதிவி தயாரா இருந்தால் மட்டும் தன்னிடம் பேசுமாறு பாஜகவிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

நாளைக்குள் ஆட்சி அமைக்கப்படவில்லை எனில், ஜனாதிபதி ஆட்சிதான் என்ற வகையில், ஆட்சி அமைப்பதற்கென்று அளிக்கப்பட்ட நேரத்தின் குறிகிய விளிம்பில் தற்போது நின்று கொண்டிருக்கிறது பாஜக-சிவசேனா கூட்டணி. எனினும், இருகட்சிகளும், இதுவரை எந்த ஓர் தீர்மானத்திற்கும் இறங்கி வர தயாராக இல்லாத நிலையில், இந்த நிமிடம் வரை ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்  தலைவர் மோகன் பகவத்தை இன்று சந்திக்கவுள்ள, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, மகாராஷ்டிரா மாநிலத்தில், தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி தான் அமைக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

இதனிடையில், அம்மாநில ஆளுநருடனான சந்திப்பிற்கு, சிவசேனாவின் சம்மதத்தை எதிர் நோக்கி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக குழு காத்திருக்கும் நிலையில், "முதலமைச்சர் பதிவி குறித்து தேர்தலுக்கு முன்னரே தீர்மானம் எடுக்கப்பட்டது.அதன் அடிப்படையில் தான் நாங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளோம். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாரதிய ஜனதா கட்சி தயாராக இல்லாத நிலையில், கலந்துரையாடலில் என்ன அர்த்தம் இருக்கிறது" என்று கேள்வியெழுப்பியுள்ளார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.

மேலும், "கூட்டணியை கலைப்பதில் எங்களுக்கும் விருப்பம் இல்லை. எனினும், சிவசேனாவிற்கென்று ஓர் மரியாதை இருக்கிறது, அதை பாஜகவும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close