அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு 

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2019 10:26 pm
verdict-on-ayodhya-case-tomorrow

ராமஜென்மபூமி - பாபர் மசூதி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் நாளை (நவ., 9) தீர்ப்பளிக்க உள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் அயோத்யாவில் உள்ள ராமஜென்மபூமியில் அமைந்திருந்த ஹிந்து கோவில் மீது, இஸ்லாமியர்கள் மசூதி கட்டியதாக கூறி, ஹிந்துக்கள் தரப்பில் அதை இடிக்கும் முயற்சி நடை பெற்றது. இதை அடுத்து குறிப்பிட்ட அந்த பகுதியை சொந்தம் கொண்டாடி ஹிந்து - முஸ்லீம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப்பின், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், உபி மாநில போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

மாநில முதல்வர் ஆதித்யநாத், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close