அயோத்தி வழக்கு தீர்ப்பு: நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2019 08:51 am
ayodhya-verdict-prime-minister-appeals-to-the-people

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நாம் அனைவரும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடே  எதிர்பார்த்துள்ள அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு அதிரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், ‘அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ இருக்காது. நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நாம் அனைவரும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close