சிவசேனாவிற்கு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு!! 

  அபிநயா   | Last Modified : 10 Nov, 2019 03:37 pm
congress-mlas-have-unanimously-decided-to-support-shiv-sena-to-form-the-government

மகாராஷ்டிரா மாநில தேர்தல் விவகாரங்களில் இனியும் ஓர் முடிவு எட்டப்படாத நிலையில், பாஜகவுடனான கூட்டணியை கைவிட்டுவிட்டு அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்குமாறு சிவசேனாவிற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணியிடையே ஆட்சி அமைப்பது குறித்தான கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வருகிறது. சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யை தாக்கரேவை முதலமைச்சர் பதவியில் அமர்த்தலாம் என்றும், ஆட்சியை 2.5 ஆண்டுகளாக பிரித்து கொள்ளலாம் என்று கூறிவருகிறது சிவசேனா. ஆட்சியை பிரித்து கொள்வது என்பது பாஜகவின் வரலாற்றிலே இது வரை மேற்கொள்ளப்படாத ஓர் விஷயம் என்பதால் அதற்கு சம்மதம் தெரிவிக்க மறுக்கிறது சிவசேனா.

அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு மொத்தமுள்ள  288 இடங்களில் குறைந்த பட்சம் 145 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும் என்னும் நிலையில், 105 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கொண்டிருக்கும் பாஜக, தனிச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவை கோரி கோரிக்கை விடுத்துள்ளது. 

இதனிடையில், எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பாஜகவிற்கு எதிராக சிவசேனாவை திசை திருப்ப தங்களால் இயன்ற அளவு கொம்பு சீவி விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தில், சிவசேனா ஆட்சி அமைப்பதற்கு தங்களது ஆதரவும் உண்டு என்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சி, தங்களது எம்.எல்.ஏக்களின் முழு ஆதரவும் சிவசேனாவிற்கு இருப்பதாக அறிவித்துள்ளது. 

மேலும், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகி ஆட்சி அமைக்குமாறும், கனரக தொழிலகம் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சரான அரவிந்த் சவந்த்தை பாஜகவின் ஆட்சியிலிருந்து பதவி விலகுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது தேசியவாத காங்கிரஸ் கட்சி.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close