முதலமைச்சர் பதவியில் சிவசேனா அமர்வதற்கு அமித் ஷாவோ பட்னாவிஸோ தேவையில்லை - உத்தவ் கொந்தளிப்பு!!

  அபிநயா   | Last Modified : 10 Nov, 2019 03:38 pm
promised-balasaheb-that-there-will-be-shiv-sena-cm-one-day-don-t-need-amit-shah-and-devendra-fadnavis-uddhav

மகாராஷ்டிரா மாநிலம் : தேர்தலை தொடர்ந்தும் வெற்றி கூட்டணிகளிடையே பலத்த கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவிற்கு அளித்த வாக்குறுதியை நிச்சயமாக ஓர் நாள் நிறைவேற்றுவேன் என்றும், முதலமைச்சர் பதவியில் சிவசேனா அமர்ந்து ஆட்சி புரிவதற்கு அமித் ஷாவோ, பட்னாவிஸோ தேவையில்லை என்றும் கூறியுள்ளார் உத்தவ் தாக்கரே.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையிலும், அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்த எந்த முடிவுகளும் இதுவரை எடுக்கப்படாத நிலையில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்திருந்தார் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ். 

இதை தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், சிவசேனா கூறுவது போல தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் பதவி குறித்த எந்த கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக உத்தவ் தாக்கரேவை தொலைபேசி மூலம் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையிலும் அவர் பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார். 

இதை தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கலந்துரையாடலுக்கு தான் எப்போதுமே மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும், தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் பதவி குறித்த கலந்துரையாடல் எழவே இல்லை என்ற பாஜகவின் பொய்க்கு பின்தான் அவர்களுடன் பேச பிடிக்காமல் பேசவில்லை என்வும் கூறினார்.

மேலும், மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியில் நிச்சயமாக சிவசேனா ஓர் நாள் அமரும் என்று பால் தாக்கரேவிற்கு தான் அளித்திருக்கும் வாக்குறுதியை காப்பாற்ற தனக்கு அமித் ஷாவின் உதவியோ தேவேந்திர பட்னாவிஸின் உதவியோ தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close