அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2019 08:14 pm
governor-refuses-to-give-time-aditya-thackeray

மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைப்பதற்கு அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்தபின் சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சியமைக்க விரும்புவதாக ஆளுநரிடம் கூறினோம். ஆட்சியமைக்க 2 நாட்கள் அவகாசம் அளிக்க ஆளுநர் மறுத்துவிட்டார். ஆட்சியமைக்கும் கோரிக்கையை ஆளுநர் மறுக்கவில்லை; ஆனால் அவகாசம் அளிக்க மறுத்துவிட்டார். மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம். ஆட்சியமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம்’ என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close