சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று காங்கிரஸின் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா நிலவரம் குறித்து அம்மாநில கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், சிவசேனாவை ஆதரிப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் உடன் ஆலோசனைகள் தொடரும் என்றும் வேணுகோபால் கூறியுள்ளார். முன்னதாக, ஆட்சியமைப்பதற்கு அவகாசம் அளிக்க ஆளுநர் மறுத்துவிட்டதாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in