மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை என்று மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை, ‘சிவசேனா தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள். ஆனால், ஆட்சியமைப்பதற்கு தேவையான ஆதரவு கடிதத்தை சிவசேனா கட்சி அளிக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவை 3 நாட்களில் வழங்குவதாக சிவசேனா கடிதம் அளித்தது. ஆதரவு இல்லாததால் 3 நாட்கள் அவகாசம் வழங்க முடியாது என ஆளுநர் மறுத்துவிட்டார்’ என்று விளக்கம் அளித்துள்ளது.
newstm.in