மகாராஷ்டிரா : குடியரசுத் தலைவர் ஆட்சி "ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட செயல்" - சஞ்சய் ராவுத் குற்றச்சாட்டு!!

  அபிநயா   | Last Modified : 14 Nov, 2019 01:44 pm
impostion-of-president-s-rule-scripted-act-says-shiv-sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்ததை தொடர்ந்து, அம்மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில், தொடக்கம் முதலே பாரதிய ஜனதா கட்சியை வெகுவாக குற்றம் சாட்டி வரும் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத், தற்போது அமல்படுத்தபட்டிருக்கும் குடியரசுத் தலைவர் ஆட்சி, யாரோ செய்திருக்கும் :ஸ்கிரிப்டட் செயல் தான் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு சுமார் 3 வாரங்கள் கடந்துள்ள நிலையிலும், வெற்றி கூட்டணியிடையே நிலவி வந்த பலத்த கருத்து வேறுபாடுகளினால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. 

இதனை தொடர்ந்து, அம்மாநில தேர்தலில் போட்டியிட்ட எந்த கட்சியாலும் பெருமாபாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க இயலாத நிலையில்,  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அமல்படுத்தபட்டிருக்கும் குடியரசுத் தலைவரது ஆட்சி யாரோ ஸ்கிரிப்ட் செய்திருக்கும் செயல் என்று சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷீவிடமிருந்து சிவசேனாவை பிரிப்பதற்காக யாரோ செய்யும் சதி வேலை இது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close