மகாராஷ்டிரா : சரத் பவார், சோனியா காந்தி சந்திப்பு ஒத்திவைப்பு!!!

  அபிநயா   | Last Modified : 16 Nov, 2019 10:02 pm
sharad-pawar-sonia-gandhi-meeting-may-be-deferred

மகாராஷ்டிரா மாநிலத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வரும் ஞாயிறன்று, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடலில் ஈடுபடவிருந்த நிலையில், இருவரது சந்திப்பும் தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநில தேர்தலை தொடர்ந்தும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்ததை தொடர்ந்து, போட்டியிட்ட கட்சிகளாலும் பெரும்பாண்மையை நிரூபிக்க மூடியாத நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுடன், கடந்த செவ்வாயன்று அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டது. 

இதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மூன்றும் இணைந்து 40 திட்டங்கள் கொண்டுள்ள பொதுவான குறைந்தபட்ச திட்டத்தை வரையறுத்திருந்தனர். 

எனினும், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, வரும் ஞாயிறன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சந்திக்கவிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், அன்று அவரது கட்சி உறுப்பினர்களை பூனேவில் வைத்து சந்திக்கவிருப்பதை தொடர்ந்து, இருதலைவர்களின் சந்திப்பும் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close