மாநிலங்களவையின் பங்கை நாம் ஒருபோதும் மறக்க முடியாது: பிரதமர் பேச்சு

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 03:18 pm
we-can-never-forget-the-role-of-the-rajya-sabha-prime-minister-s-speech

பன்முகத்தன்மையின் பிரதிநிதியாக, கூட்டாட்சி அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதாக மாநிலங்களவை உள்ளதாக, மாநிலங்களவையில் 250ஆவது கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரமதர் மேலும் பேசுகையில், ‘தேர்தலில் பங்கேற்காதவர்களும் நாட்டின் வளர்சிக்கு உதவ மாநிலங்களவை வாய்ப்பளிக்கிறது. சிறந்த தலைவர்கள் பலர் மாநிலங்களவையில் உரையாற்றி இருக்கின்றனர். முத்தலாக் மசோதா இங்கு நிறைவேற்றப்படாது என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால், அது நடந்தேறியது. இதேபோல்தான் ஜிஎஸ்டியிலும் நடைபெற்றது. 370 சட்டப்பிரிவு  நீக்கம் மற்றும் 35(ஏ) தொடர்பான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது மாநிலங்களவையின் பங்கை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.

கடந்த 2003 ஆம் ஆண்டில், மாநிலங்களவை இரண்டாவது வீடாக இருக்கலாம், ஆனால் அதை இரண்டாம் நிலை வீடு என்று அழைக்கக்கூடாது என்று அடல் ஜி குறிப்பிட்டிருந்தார். இன்று, நான் அடல் ஜியின் எண்ணங்களுடன் உடன்படுகிறேன்.

இன்று நான் என்சிபி மற்றும் பிஜேடி ஆகிய இரு கட்சிகளைப் பாராட்ட விரும்புகிறேன். இந்த கட்சிகள்  நாடாளுமன்ற விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்துள்ளன. நான் உள்ளிட்ட பிற கட்சிகள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்’ என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close