ராஜஸ்தான் நகராட்சி தேர்தல்: காங்கிரஸ் 863,  பாஜக 661 வார்டுகளில் வெற்றி 

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2019 05:10 pm
rajasthan-local-body-election-congress-wins-863-wards-bjp-661

ராஜஸ்தான் நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் 863 வார்டுகளிலும், பாஜக 661 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தானில் 49 நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 49 குடிமை அமைப்புகளுக்கான தேர்தலில் மொத்தம் 7,942 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக  சார்பில் 1,166 ஆண்கள் மற்றும் 730 பெண்களும்,  காங்கிரஸ் சார்பில் 778 பெண் வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 33 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிற்பகல் 2 மணி வரை காங்கிரஸ் 863 வார்டுகளிலும், பாஜக 661 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இறுதி முடிவுகள் இன்று பிற்பகுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close