இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சே வரும் 29ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பிரதமரின் சார்பாக இந்தியாவிற்கு வருமாறு கோத்தபயவிற்கு ஜெய்சங்கர் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று கோத்தபய ராஜபக்சே இந்திய வருகிறார் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
newstm.in