காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்திப்பு !!

  அபிநயா   | Last Modified : 21 Nov, 2019 06:39 pm
congress-ncp-announce-maha-vikas-aghadi-alliance-for-maharashtra-to-meet-shiv-sena-for-final-push

மகாராஷ்டிரா : சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ், என்.சி.பி கட்சிகள் தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை சரிசெய்து விட்டதாக அக்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். 

சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இன்று மாலை டெல்லியில் உள்ள சரத் பவாரது இல்லத்தில் வைத்து ஆட்சி அமைப்பதும் குறித்தும் பொதுவான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். இந்த சந்திப்பை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் பிரித்வி சவான், தேசியவாத கட்சி தலைவர் நவாப் மாலிக் இருவரும், இருகட்சிகளும் தங்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை சரி செய்து விட்டதாக கூறியுள்ளனர். 

மேலும், நாளை சிவசேனா தலைவர்களை மும்பையில் வைத்து சந்திக்கவுள்ள இருகட்சி தலைவர்களும், கூட்டணி அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பொதுவான குறைந்தபட்ட திட்டங்கள் குறித்தும், ஆட்சி அமைப்பதை குறித்தும் கலந்துரையாடிய பின்னர் ஓர் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறியுள்ள இருவரும், மிக விரைவில் மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமையும் என்று உறுதியளித்துள்ளனர். 

இதனிடையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் "மஹா விகாஸ் அகாதி" என்று பெயரிட்டுள்ளதோடு, நாளை சிவசேனாவை சந்தித்து அதன் இணைப்பையும் உறுதி செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close