மகாராஷ்டிரா : முக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி நீடிக்காது - நிதின் கட்கரி!!!

  அபிநயா   | Last Modified : 22 Nov, 2019 05:50 pm
nitin-gadkari-takes-a-jibe-at-shiv-sena-congress-ncp-alliance-says-their-govt-won-t-last-six-months

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைப்பதாக தகவல்கள் வெளிவருகின்ற போதும், இதுவரை உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், அப்படி ஆட்சி அமைத்தாலும், அது 6 மாதத்திற்கு மேல் நீடிக்காது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான நிதின் கட்கரி.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் மற்றும் என்.சி.பி கட்சிகள் சம்மதம் தெரிவித்திருப்பதை தொடர்ந்து, இன்று மூன்று கட்சிகளின் தலைவர்களும் சந்திக்கவுள்ள நிலையில், இந்த சந்திப்பை தொடர்ந்து ஆட்சி அமைப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்த மூன்று கட்சிகளின் கொள்கைகளில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளதென்றும், பாஜக வை ஆட்சியில் அமர விட கூடாது என்ற நோக்கத்துடன் மட்டுமே இணையும் இந்த முக்கட்சிகளின் கூட்டணி 6 முதல் 8 மாதங்கள் கூட நிலைக்காது என்று கூறியுள்ளார் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி.

இதை தொடர்ந்து, இந்த முக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கப்படாத பட்சத்தில் மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சியை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, கட்சி உறுப்பினர்கள் அனைவருடனும் கலந்துரையாடிய பின்னரே இந்த கேள்விக்கு விடையளிக்க முடியும் என்று கூறியுள்ளார் நிதின் கட்கரி. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close