மகாராஷ்டிரா : நாளை ஆளுநரை சந்திக்குமா சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணி ??

  அபிநயா   | Last Modified : 22 Nov, 2019 07:15 pm
congress-ncp-shiv-sena-to-meet-governor-tomorrow

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், நாளை மேற்கொள்ளவிருந்த பந்தர்பூர் சந்திப்பை ரத்து செய்துள்ளதை தொடர்ந்து, சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து தீர்மானமாக தெரிவிப்பதற்காக நாளை அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை மூன்று கட்சி தலைவர்களும் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்த தீர்மானத்திற்காக தற்போது மூன்று கட்சி தலைவர்களும் மும்பையில் சந்தித்துள்ளதை தொடர்ந்து, ஆட்சி அமைப்பது குறித்த முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், நாளை செல்ல வேண்டிய பந்தர்பூர் பயணத்தை தற்போது ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முக்கட்சி தலைவர்களின் ஆளுநர் சந்திப்பு காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close