காங்கிரஸ் அவசர ஆலோசனை!

  அனிதா   | Last Modified : 23 Nov, 2019 11:02 am
an-urgent-meeting-has-been-called-by-congress-at-party-office-in-mumbai

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று வரை சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், இன்று திடீர் திருப்பமாக என்.சி.பி கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளனர். இதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், இது அஜித் பவாரின் முடிவு என்றும் கட்சியின் முடிவல்ல எனவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள மும்பையில் காங்கிரஸ் கட்சி அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close