கட்சியும், குடும்பமும் உடைந்துவிட்டது: சரத்பவார் மகளின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

  அனிதா   | Last Modified : 23 Nov, 2019 11:30 am
party-and-family-split-supriya-sule-whatsapp-status

தேசியவாத காங்கிரஸ் கட்சியும், குடும்பமும் உடைந்து விட்டதாக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.

மகாராஷ்டிராவில், சிவசேனா ஆட்சி அமைப்பதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்று ஆட்சியமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்ட நிலையில், ஒரே இரவில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இத்தகைய பெரும் திருப்பம் மகாராஷ்டிரா மட்டுமின்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

இதனிடையே தேசிய வாத கட்சி தலைவர் சரத்பவார், பாஜகவுடனான கூட்டணி அமைக்கும் முடிவு அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்றும் இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை என்றும்  ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சரத்பவாரின் மகள்  சுப்ரியா சுலே கட்சியும், குடும்பமும் உடைந்து விட்டதாக தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்தால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close