எம்.எல்.ஏக்கள் ஆதரவு யாருக்கு? இன்று மாலை சரத்பவார் ஆலோசனை!

  அனிதா   | Last Modified : 23 Nov, 2019 12:57 pm
sharad-pawar-has-called-a-meeting-of-all-ncp-mlas-at-4-30-pm-today

மும்பையில் இன்று மாலை கட்சி எம்எல்ஏக்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

மகாராஷ்டிராவில் பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமைந்துள்ள நிலையில், வருகைப்பதிவுக்கான கையெழுத்துப்பட்டியல் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் எம்.எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 

இவ்வாறு மகாராஷ்டிரா அரசியல் பெரும் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அக்கட்சி தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அனைத்து எம்.எல்ஏக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவித்துள்ளார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close