பின் கதவு மூலம் மகாராஷ்டிரா ஆட்சியை கைபற்ற சதி - சிவசேனா, காங்., தேசியவாத காங்., மீது பாஜக குற்றச்சாட்டு!!

  அபிநயா   | Last Modified : 23 Nov, 2019 03:39 pm
conspiracy-to-capture-maharashtra-through-back-door-says-bjp

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக மீது குற்றம் சுமத்திவிட்டு பின்கதவு வழியாக ஆட்சி அமைக்க முயல்கிறது, என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி மீது குற்றம் சாட்டியுள்ளது பாரதிய ஜனதா கட்சி.

ஆட்சியை பிடித்து விடுவதில் முழு மூச்சுடன் செயல்பட்டு வந்த சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இன்று முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் பாரதிய ஜனதா கட்சி தலைவரான தேவேந்திர ஃபட்னாவிஸ். இதை தொடர்ந்து, பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ள நிலையிலும், பாஜகவை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது சிவசேனா ஆதரவு கட்சிகள். இந்நிலையில், தேர்தலில் வெற்று பெற்று முறையாக பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைத்திருக்கும் எங்கள் மீது குற்றம் சுமத்திவிட்டு பின் கதவு வழியாக உள்ளே நுழைந்து ஆட்சி அமைக்க விரும்புகிறது சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close