மகாராஷ்டரா : சரத் பவார் கூட்டத்தில் 42 எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு!!!

  அபிநயா   | Last Modified : 23 Nov, 2019 08:40 pm
sharad-pawar-meet-with-his-party-mlas

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், சிவசேனாவிற்கு ஆதரவளித்து வந்த தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார், தனது எம்.எல்.ஏக்களை சந்தித்து இன்று மாலை பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

தந்தை சிவசேனாவிற்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், மகன் பாஜகவுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்து விட்டார். என்.சி.பி எம்.எல்.ஏக்கள் 54 பேரின் ஆதரவுடன் தான் பெரும்பாண்மை நிரூபிக்கப்பட்டு ஆட்சி அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், தனது கட்சி எம்.எல்.ஏக்களை சந்தித்து இன்று மாலை உரையாடவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவரது அழைப்பை ஏற்று 42 எம்.எல்.ஏக்கள் வந்துள்ளதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close