பாஜகவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் !!!

  அபிநயா   | Last Modified : 23 Nov, 2019 09:05 pm
shiv-sena-ncp-and-congress-move-supreme-court-against-the-decision-of-maharashtra-governor

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று வரை இல்லாமல், திடீர் திருப்பமாக என்.சி.பியுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளதை தொடர்ந்து, பாஜகவின் இந்த செயலினால் அதிருப்தியடைந்துள்ள மற்ற மூன்று கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவில், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்திருப்பதை தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரது மகன் அஜித் பவாரும், இன்று காலை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். 

இதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து இன்று ஆளுநரை சந்தித்து அறிவிக்கவிருந்த சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர், பாஜகவின் திடீர் ஆட்சி அமைப்பினால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், இம்மூன்று கட்சிகளும், பாஜகவின் இந்த செயலுக்கு எதிராகவும், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக அக்கட்சிகளுக்காக வாதாடவிருக்கும் வழக்கறிஞர் தேவதத் காமத் கூறியுள்ளார். 

மேலும், இந்த வழக்கை இன்று இரவே விசாரிக்குமாறு அவசர மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நாளை தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள ஆளுநர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி டெல்லி சென்றடைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close