எதற்காக அதிகாலை நேரத்தில் திரும்ப பெறப்பட்டது குடியரசுத் தலைவர் ஆட்சி - கபில் சிபல் கேள்வி !!

  அபிநயா   | Last Modified : 25 Nov, 2019 01:19 pm
kapil-sibal-questions-about-revoke-of-president-s-rule

மகாராஷ்டிராவில், பாஜக-என்.சி.பி கூட்டணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அதிகாலை நேரத்தில் குடியரசுத் தலைவரது ஆட்சியை திரும்ப பெறும் அளவிற்கு என்ன அவசரமான அவசியம் வந்துவிட்டது என்ற கேள்வியை முன் வைத்துள்ளார் சிவசேனா தரப்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் கபில் சிபல்.

பாரதிய ஜனதா - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் கூட்டணியாக கடந்த சனிக்கிழமையன்று மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்காக விசாரிக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தது "மஹா விகாஸ் அகாதி" எனப்படும் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என.சி.பி கூட்டணி. இந்நிலையில், அதற்கான விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிவசேனா தரப்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் கபில் சிபல், அதிகாலை நேரமான 5.17 மணிக்கு குடியரசுத் தலைவரது ஆட்சியை திரும்ப பெறும் அளவிற்கு அம்மாநிலத்தில் என்ன அவசரம் நிகழ்ந்து விட்டது எனவும், அதிகாலையில் குடியரசுத் தலைவரது ஆட்சி திரும்ப பெறப்பட்டுள்ள போதும், காலை 8 மணி வரை காத்திருந்து பதவியேற்றதற்கான காரணம் என்ன என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close