ஆட்சி அமைப்பதற்காக பாஜக சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களும் போலி - என்.சி.பி ஜெயந்த் படில் குற்றச்சாட்டு!!!

  அபிநயா   | Last Modified : 25 Nov, 2019 01:18 pm
ncp-leader-jayant-patil-slams-bjp-for-false-documents

மகாராஷ்டிரா மாநிலத்தில், ஆட்சியமைக்க போதிய ஆதரவு இருப்பதாக மஹா விகாஸ் அகாதி கூட்டணி இன்று காலை ஆளுநர் மாளிகையில் கடிதம் சமர்ப்பித்துள்ள நிலையில், ஆட்சி அமைத்த நாளன்று பாஜக தரப்பில், என்.சி.பி எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் போலி என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்.சி.பி தலைவர் ஜெயந்த் படில்.

மகாராஷ்டிராவில் ஆட்டி அமைப்பதில் இழுபறி நீடித்ததை தொடர்ந்து, குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தது பாஜக. பாஜகவின் இந்த திடீர் செயலினால் அதிர்ச்சியடைந்த சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி, பாஜகவிற்கு எதிராகவும், அம்மாநில ஆளுநர் பகத் சிங்கிற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையில், இன்று "மஹா விகாஸ் அகாதி" கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக கூறி கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயந்த் படில், "இன்று காலை 10 மணியளவில் ஷிண்டே ஜி, தோரட் ஜி, சவான் ஜி, வினாயக் ராவுத் ஜி, அஸ்மி ஜி, கே.சி. பட்வி மற்றும் நான் ஆகியோர் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவுள்ள கடிதத்தை சமர்ப்பித்துள்ளோம்" என்று கூறினார். 

மேலும், உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் ஆட்சி அமைக்குமாறு தீர்ப்பு வழங்கினால் பாஜகவை விட அதிக பெரும்பான்மையை நிரூபித்து தங்களால் ஆட்சி அமைக்க முடியும் என்றும், பதவியேற்ற தினத்தன்று பாஜக தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட என்.சி.பி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் அனைத்துமே போலி என்னும் நிலையில், பெரும்பான்மையை நிரூபித்து வெற்றியடைவது பாஜகவால் முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த மூன்று கட்சிகளின் அவசர மனுவை நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்கள் விசாரணை மேற்கொண்டு வரும் உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும் என்று கூறும் "மஹா விகாஸ் அகாதி" கட்சியின் கோரிக்கையும் கருத்தில் கொண்டு, சிறிய அலோசனைக்கு பின்னர் நாளை காலை 10.30 மணிக்கு இதற்கான தீர்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close