மகாராஷ்டிரா : பாஜக பதவி விலக வேண்டும் - ஏக்நாத் ஷிண்டே!!!

  அபிநயா   | Last Modified : 25 Nov, 2019 01:32 pm
bjp-should-resigh-as-they-cannot-prove-the-majority-eknath-shinde

மகாராஷ்டிரா மாநிலத்தில், என்.சி.பியுடன் இணைந்து பாஜக அமைத்திருக்கும் ஆட்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மஹா விகாஸ் அகாதி கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பெரும்பான்மையை வெளிப்படையாக நிரூபிக்காத பாஜக பதவி விலக வேண்டும் என்று கருத்தை முன்வைத்துள்ளார் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே.

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை காலை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி முன்னிலையில் பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இதை தொடர்ந்து, பாஜகவின் இந்த செயலினால் அதிருப்தியடைந்துள்ள சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மஹா விகாஸ் அகாதி கூட்டணி பாஜக மற்றும் ஆளுநர் பகத் சிங்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்திருந்தனர். 

அதற்கான விசாரணை நேற்றும் இன்றுமாத இருநாட்கள் நடைபெற்ற நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது மஹா விகாஸ் அகாதி கூட்டணி. இந்த வழக்கிற்கான தீர்ப்பை நாளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கவுள்ளனர். இந்நிலையில், 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறி இன்று காலை ஆளுநரை சந்தித்து கடிதம் சமர்ப்பித்துள்ளது முக்கட்சி கூட்டணி.

இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பெரும்பான்மை உள்ள கட்சிதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும், நவம்பர் 23ஆம் தேதி பதவியேற்று ஆட்சி அமைத்துள்ள பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close