பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லை - சரத் பவார் கருத்து!!!

  அபிநயா   | Last Modified : 25 Nov, 2019 02:35 pm
ncp-is-not-with-the-bjp-in-forming-the-government-sharad-pawar

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை இருந்திருந்தால் பாஜக அப்போதே ஆட்சி அமைத்திருக்கும் என்று கருத்தை முன்வைத்துள்ளார் என்.சி.பி கட்சி தலைவர் சரத் பவார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவாருடன் இணைந்து, கடந்த சனிக்கிழமையன்று காலை ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றது பாரதிய ஜனதா கட்சி. இதில் முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸுக்கும், துணை முதலமைச்சராக அஜித் பவாருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி. 

இதை தொடர்ந்து பாஜகவிற்கும், ஆளுநர் பகத் சிங்கிற்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியான மஹா விகாஸ் அகாதி. இந்த வழக்கிற்கான விசாரணையில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை இன்று காலை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளது முக்கட்சி கூட்டணி.

இதை தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் தான் முன்பு ஆட்சி அமைக்கவில்லை, எதிர்கட்சியில் அமர்கிறோம் என்று கூறியது பாஜக. தற்போது பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு அவர்கள் ஆட்சி அமைத்திருப்பது எப்படி என்ற சந்தேகமே எழுகிறது. பாஜகவை விட எங்களுக்கான எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிகம் உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் மகாராஷ்டிராவில் பாஜகவால் ஆட்சி அமைக்க இயலாது என்ற கருத்தை முன்வைத்துள்ளார் என்.சி.பி. கட்சி தலைவர் சரத் பவார்.

இதனிடையில், மஹா விகாஸ் அகாதிக்கு 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறப்படும் நிலையிலும், தங்களுக்கு 170 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது என்று தெரிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close