மகாராஷ்டிரா : சிவசேனாவுடன் காங்கிரஸ் கைகோர்த்தது தான் ஜனநாயக படுகொலை - ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி!!

  அபிநயா   | Last Modified : 25 Nov, 2019 03:31 pm
murder-of-democracy-in-maharashtra-happened-when-congress-extended-support-to-shiv-sena-bjp

இன்று மக்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என்று குறிப்பிட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் ஜனநாயக படுகொலை எப்போது ஏற்பட்டது என்று விளக்கமளித்துள்ளது பாஜக.

மகாராஷ்டிரா மாநில ஆட்சி அமைப்பு குறித்த விவகாரங்களில், மஹா விகாஸ் அகாதி தரப்பில் விடுக்கப்பட்டுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்நிலையில், இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரில் மக்களவையின் கேள்வி நேரத்தின் போது உரையாற்றிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என்றும், இதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றுமே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதை தொடர்ந்து இவரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சி தரப்பினர், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது ஏற்பட்டிருப்பது ஜனநாயக கொலை இல்லை என்றும், எப்போது வெவ்வேறு கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் கொண்ட சிவசேனாவுடன் காங்கிரஸ் கைகோர்க்க முடிவு செய்து, பாஜகவுடன் கூட்டணியில் இருந்த போதே உத்தவ் தாக்கரேவை முதலமைச்சர் பதவியில் அமர்த்த முடிவு செய்ததோ அப்போது ஏற்பட்டது தான் ஜனநாயக படுகொலை என்றும் பதிலளித்துள்ளது. 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close