மகாராஷ்டிரா : முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா!!!

  அபிநயா   | Last Modified : 26 Nov, 2019 04:00 pm
devendra-fadnavis-resigns-as-cm

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சராக பதவியேற்றிருந்த பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தற்போது ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில், கடந்த சனிக்கிழமையன்று தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இதை தொடர்ந்து பாஜகவிற்கு எதிராகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவாரின் ராஜினாமைவை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்திருக்கும் தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close