மகாராஷ்டிரா : கூட்டு சபா நாயகராக உத்தவ் தாக்கரே தேர்வு ??

  அபிநயா   | Last Modified : 26 Nov, 2019 05:17 pm
kc-venugopal-confirmed-that-the-three-parties-shiv-sena-congress-ncp-will-hold-a-meeting

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸின் ராஜினாமாவை தொடர்ந்து, மஹா விகாஸ் அகாதி கூட்டணியின் சபா நாயகராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து ஆட்சி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி. இதற்கு எதிராக சிவசேனா கட்சியின் கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் துணை முதலமைச்சராக பதவியேற்ற என்.சி.பி கட்சி தலைவர் அஜித் பவாரும், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸும் தற்போது ராஜினாமா செய்துள்ளனர். இதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் கே.சி. வேணுகோபால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவின் கூட்டணியான மஹா விகாஸ் அகாதி, இன்று மாலை சந்திக்கவுள்ள நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இக்கூட்டணி கட்சிகளின் சபா நாயராக தேர்வு செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close