மகாராஷ்டிரா : முதலமைச்சராக உத்தவ் தாக்கரே தேர்வு - என்.சி.பி அறிவிப்பு!!!

  அபிநயா   | Last Modified : 26 Nov, 2019 06:15 pm
uddhav-thackeray-to-be-next-cm-confirms-ncp

மகாராஷ்டிரா மாநில அரசியல் விவகாரங்களை தொடர்ந்து, இன்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ள நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில், கடந்த சனிக்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து ஆட்சி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி. இதனிடையில், பாஜக ஆட்சிக்கு எதிராக சிவசேனா கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இன்று அம்மாநில முதலமைச்சரான பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சரான என்.சி.பி கட்சி தலைவர் அஜித் பவாரும் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையில் தங்களுக்கு 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளதாக குறிப்பிடும் மஹா விகாஸ் அகாதியான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என்று அறிவித்துள்ளது.

இது குறித்து என்.சி.பி தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்பார் என்றும், நாளை சிறப்பு சட்டசபை அமர்வு நடைபெறவுள்ளதாகவும், அதில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் காலை 8.30 மணிக்கு பதவியேற்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close