நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அவர்கள் வெளிநடப்பு செய்வது சரியல்ல; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
விவாதம் நடத்த வேண்டுமென்று கூறும் எதிர்க்கட்சிகள் அதற்கு பதில் தரும்போது வெளிநடப்பு செய்கிறார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘அவசரகதியில் பார்த்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக தெரியும். நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இல்லை;எப்போதும் மந்த நிலைக்கு வராது’ என்று பேசினார். இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
newstm.in