சாத்வி சர்ச்சை பேச்சு: கண்டம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

  அனிதா   | Last Modified : 28 Nov, 2019 11:56 am
congress-mps-stage-walkout-from-lok-sabha

கோட்சே தேசபக்தர் என்று மக்களவையில் சாத்வி பிரக்யா கூறியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். 

பாஜக எம்.பி சாத்வி பிரக்யா கோட்சே தேசபக்தர் என மக்களவையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கடிதம் அளித்திருந்தனர். இந்நிலையில், சாத்வி பிரக்யா பேசியது அவைக்குறிப்பில் நீக்கப்பட்டதால் அதைப்பற்றி விவாதிக்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 

முன்னதாக, நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறினால் அதை பாஜக நிச்சம் கண்டிக்கும் என்றும் மகாத்மா காந்தி எங்களுக்கு வழிகாட்டும் விளக்காக இருந்தார், இனிமேலும் இருப்பார் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close