கோவாவிலும் கால் பதிக்குமா சிவசேனா ???

  அபிநயா   | Last Modified : 29 Nov, 2019 02:50 pm
sanjay-raut-sounds-bugle-for-non-bjp-front-in-india

மகாராஷ்டிரா மாநில ஆட்சி அமைப்பை தொடர்ந்து, கோவா மாநிலத்திலும் சிவசேனா ஆட்சி விரைவில் தொடங்கும் என அக்கட்சி தலைவர் சஞ்சய் ராவுத் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பெரும் பாலமாக இருந்த சிவசேனா கட்சி ஆலோசகர் சஞ்சய் ராவுத், மகாராஷ்டிராவின் ஆட்சி அமைப்பை தொடர்ந்து கோவாவிலும் பாஜக இல்லாத ஆட்சி விரைவில் அமையவிருப்பதாக கூறியுள்ளார்.

கோவா மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னோக்கு கட்சியின் தலைவருமான விஜய் சர்தேசாயமும், மேலும் மூன்று எம்.பிக்களும் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்கவிருப்பதாக கூறிய சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத், அம்மாநிலம் இதுவரை கண்டிராத புதுமுக அரசியலை காணவிருப்பதாகவும், மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்டதை போல கோவாவிலும் பாரதிய ஜனதா கட்சி இல்லாத ஆட்சி அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

மேலும், இவ்விரு மாநிலங்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பாஜக இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்றும், அத்தகைய ஆட்சி கூடிய விரைவில் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து, சிவசேனாவுடன் இணைய போவதாக குறிப்பிடப்பட்ட முன்னோக்கு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் கூறுகையில், சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியான மஹா விகாஸ் அகாதி மகாராஷ்டிராவில் மட்டுமல்லாது கோவாவிலும் தொடரப்பட வேண்டும் என்றும், இந்த முன்னேற்றத்திற்காக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close