எதிர்கட்சி தலைவர் ஃபட்னாவிஸிற்கி சஞ்சய் ராவுத் வாழ்த்து!!

  அபிநயா   | Last Modified : 29 Nov, 2019 03:10 pm
sanjay-raut-congradulates-fadnavis-for-becoming-opposition-leader

மகாராஷ்டிரா : உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமை செய்ததோடு எதிர்கட்சி இருக்கையில் அமர்ந்திருக்கும் பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸிற்கு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சனிக்கிழமையன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, முதலமைச்சராக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும், துணை முதலமைச்சராக என்.சி.பி தலைவர் அஜித் பவாரும் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றனர். இதை தொடர்ந்து, பாஜக ஆட்சி அமைப்பிற்கு எதிராக மஹா விகாஸ் அகாதி கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற காரணத்தால், வாக்கெடுப்பிற்கு முன்பே முதலமைச்சர் ஃபட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், நேற்று மாலை சிவாஜி பூங்காவில் வைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் உட்பட பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த சிவசேனா கட்சி ஆலோசகர் சஞ்சய் ராவுத், மகாராஷ்டிராவில் பாஜவிற்கு எதிராக யாருமே இல்லை என்று பெருமையாக கூறிக்கொண்டிருந்த ஃபட்னாவிஸே அந்த இருக்கையில் அமர்ந்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close