மகாராஷ்டிரா : நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா வெற்றி!!!

  அபிநயா   | Last Modified : 30 Nov, 2019 03:22 pm
maharashtra-government-formation-floor-test-uddhav-thackeray-got-victory

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹா விகாஸ் கூட்டணி 169 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மஹா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த வியானன்று மாலை சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். இதனிடையில், வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவிற்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ஆளுநரின் உத்தரவிற்கினங்க, இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று உத்தவ் தாக்கரே தலைமையிலான மஹா விகாஸ் அகாதி கூட்டணி பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close