நாடாளுமன்றத்தில் பரபரப்பு! போராட்டத்தில் குதித்த ப.சிதம்பரம்!

  Ramesh   | Last Modified : 05 Dec, 2019 03:31 pm
chidambaram-joins-protest

ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பல முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில்  சுப்ரீம் கோர்ட்டு, நேற்று அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து 106 நாட்களுக்கு பிறகு நேற்று திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலையானார். 
ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறும் போது, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மேற்கோள் காட்டி, அவர் இந்த வழக்கைப் பற்றி கருத்து  கூற மறுத்து விட்டார். 

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த  ப.சிதம்பரம், வெங்காய விலை உயர்வை கண்டித்து  நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் சார்பில்  நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்த நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close