வெங்காயத்துக்கு பதிலா வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா நிதியமைச்சர்? களை கட்டும் நாடாளுமன்றம்!

  Ramesh   | Last Modified : 05 Dec, 2019 05:18 pm
chidambaram-asks-whether-finance-minister-nirmala-seetharaman-eats-avocado-instead-of-onion

திகார் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்திருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், இன்றைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, நிர்மலா வெண்ணைப் பழம் சாப்பிடுகிறாரா?’ என்று கிண்டலடித்து தனது சேட்டையை ஆரம்பித்தார்.


முன்னதாக, 106 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக சென்றிருந்த ப.சிதம்பரம்,  வெங்காயம் விலைஏற்றத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வெங்காயம் சாப்பிடுவதில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், வெங்காயம் சாப்பிடாமல் நிர்மலா சீதாராமன் வேறு என்ன சாப்பிடுகிறார் என்றும் வெண்ணெய் பழம் சாப்பிடுகிறாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். வெண்ணெய்ப் பழம் கிலோ 400 ரூபாய்க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close