என்னை எளிதாக முடக்கி விட முடியாது! ப.சிதம்பரம் ஆவேசம்!

  Ramesh   | Last Modified : 05 Dec, 2019 06:44 pm
chidambaram-angry-speech

திகார் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் மக்கள் குறித்து நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நான் அவர்களுக்காக வேண்டிக்கொண்டு இருக்கிறேன் என்றார். மேலும், காஷ்மீர் பிரிவினை முடிவு, திமிர்த்தனமாக எடுக்கப்பட்ட முடிவு என்று மத்திய அரசை குற்றம் சாட்டினார். மேலும், காஷ்மீர் பிரிவினையால், 75 லட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை பாஜக பறித்துள்ளதாகவும், இந்தியாவில் எல்லோரும் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்த ப.சிதம்பரம், எல்லா துறையினரும் பாஜக அரசை பார்த்து பயந்து வருவதாகவும் தெரிவித்தார்.

                                                     

நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார சீர்குலைவை சரி செய்ய முடியும் என்றும், ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு செய்ய தெரியாது. நாங்கள் ஐடியா கொடுத்தாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார். 
என்னுடைய ஆன்மா இன்னும் வலுவாக இருக்கிறது. என்னை எளிதாக முடக்கி விட முடியாது. நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன். நான் நினைத்ததை விட என் உடலும் வலிமையாக இருக்கிறது. நான் மேலும் வலிமை அடைந்துள்ளேன். நான் மரக்கட்டிலில் படுத்து தூங்கினேன். என் உடல் அதனால் அதிகம் வலு அடைந்தது. எங்களுக்கு பொருளாதாரம் தெரிகிறது என்று தான் எங்களை பழி வாங்குகிறார்கள் என்று ப.சிதம்பரம் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close