மோடிக்கு எதிராக எழுத பல லட்சங்கள் சம்பளம்!- கேம்பிரிட்ஜ் ஆனல்டிகாவை பயன்படுத்திய காங்கிரஸ்

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2018 10:15 am
68-journalists-writers-and-bureaucrats-given-2-5-lakh-month-to-write-against-pm-modi-through-cambridge-analytica

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் எழுத, மோடியை திட்ட, அவரைப் பற்றி தவறான தகவலைப் பரப்ப பத்திரிகையாளர்கள், கட்டுரையாளர்கள், அதிகாரிகளுக்கு மாதம் பல லட்சம் தொகை வழங்க கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியுள்ளது சமீபத்தில் அம்பலமானது. 

இதன் அடிப்படையில் பணம் பெற்று வெறுப்பு நோக்கத்தில் எழுதிட நியமிக்கப்பட்ட 68 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அம்பலமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா - காங்கிரஸ் தொடர்பு 

பிரபல சமூக ஊடகமான பேஸ்புக் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்பட்ட விவகாரத்தில் கேம்பிரிட்ஜ் அனல்டிகா நிறுவனத்தின் பெயர் வெளியுலகத்துக்கு தெரியவந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, சுமார் 9 கோடி அமெரிக்கர்களது தகவல்கள் பேஸ்புக் மூலம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  இதனால், அமெரிக்க தேர்தலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. 

அந்த சம்பவத்தில் பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் சம்பந்தப்பட்டிருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்தின் தவறும் இருப்பதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டதோடு மன்னிப்பும் கோரினார். 

கேம்பிரிட்ஜ் நிறுவனம் இதே போல இந்திய பொதுத் தேர்தலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பேஸ்புக்கில் உள்ள தனிநபர்களின் உணர்வுகளை உள்வாங்கி அதன் அடிப்படையில் அவர்களது தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா பயன்படுத்தி அரசியல் கட்சிகளுக்கு ஆதாயம் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே இந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட மோசடி வேலை. இதனை காங்கிரஸ் மிகவும் நாசூக்காக பயன்படுத்தியுள்ளது இருப்பினும் அந்தக் கட்சியால் ஆதாயம் தான் தேடிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா பிரச்னை வெளியானது காங்கிரஸ் கட்சிக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத் தலைவரை சந்தித்த இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றிய விவரங்களை ரிபப்ளிக் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது.

இதற்காக இந்தக் கட்சிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைத் தொடங்கி, அதன் மூலம் பணப் பரிமாற்றம் செய்ததும் தெரியவந்துள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காகக் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் அளவுக்கு இந்தக் கட்சிகள் செலவு செய்துள்ளன. தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவிடமிருந்து பெற்ற தகவலை வைத்து, அவர்களுக்குப் பிரதமர் மோடி பற்றி அவதூறான செய்திகளைக் கொண்டு சேர்க்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதும் வெளியாகி உள்ளது. இதற்காக 68 பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு மாதத்துக்கு ஒருவருக்கு 2 முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து வருவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் அந்த தொலைக்காட்சி மின்னஞ்சல் ஆதாரத்தையும் வெளியிட்டது.

 

 

ஆனால், இதைக் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இருப்பினும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே காங்கிரஸ் பொய் சொல்கிறது என்பதை நிரூபித்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் ராபர்ட் வதேரா குடும்பத்துக்கு நெருக்கமான செஷாத் என்பவர் கூறுகையில், "அம்ரிஷ் தியாகி என்பவர் ஓவலேனோ என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் ராகுல் காந்தி மற்றும் அவரது குழுவினருடன் நெருக்கமாக உள்ளார். இதற்கு உறுதியான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இதுவரை அவர்கள் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சில தகவலை சொல்லியதும், அதை மறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது" என்றார்.

யார் இந்த அம்ரிஷ் தியாகி?

ஐக்கிய ஜனதா தளத் தலைவர் கே.சி தியாகியின் மகன்தான் இந்த அம்ரிஷ் தியாகி. இவர்கள் 2015 பீகார் தேர்தலின்போது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் உதவியைப் பெற்றனர். இது தொடர்பான சில மின்னஞ்சல்களைச் செஷாத் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாகச் செஷாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "2016ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் ஓவலேனோ நிறுவனத்தின் அம்ரிஷ் தியாகி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் அலெக்சாண்டர் என்பவரை சந்தித்துள்ளார். 2012ம் ஆண்டு முதல் அம்ரிஷ் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதற்கான ஆதாரங்கள், மின்னஞ்சல்கள் என்னிடம் உள்ளன" என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், காங்கிரஸ் கட்சி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கேம்பிரிட்ஜ் அனலிடிகாவை பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் இந்தியர்கள் பற்றிய தனிப்பட்ட விவரங்களைப் பெற்றுள்ள ஒரு கட்சி எப்படி நாட்டின் பாதுகாப்புக்கு உண்மையானதாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயகம் காக்கப்படும். ஒருவேளை இவர்கள் சாதூர்யமாக பினாமி பெயர்களையும் தொழில்நுட்ப உத்திகளையும் பயன்படுத்தினாலும் மக்கள் மேடையில் கருப்பு ஆடுகளின் தோலுரியும் என்பது நிதர்சனமான யதார்த்தம் . 

செய்தி ஆக்கம்: போஸ்ட்கார்டு

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close