பின்னை இட்ட தீ...தென் இலங்கையில்...

  பாரதி பித்தன்   | Last Modified : 27 Nov, 2018 06:20 am
special-story-ayodhya-ramar-temple

பட்டினத்தார் தன் தாய் இறந்த பின்னர் ... ”முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே; பின்னை இட்ட தீ தென் இலங்கையில்” என்று தொடங்கும் பாடலை பாடி தன் தாயின் சிதையை எரியூட்டுகிறார்.   இதில் அவர் ராமாயண காட்சியை எடுத்துக்காட்டுகிறார்.

ராமனுக்காக அனுமன் ராவணன் அரசவைக்கு தூது செல்கின்றார். அங்கு தூதுவனுக்கு கொடுக்க வேண்டிய குறைந்த பட்ச மரியாதையைக் கூட கொடுக்காமல் அனுமன் வாலில் தீ வைக்கிறான். அந்த தீ பரவி இலங்கையை அழிக்கிறது.

அதே போல தங்கள் அரசியல் வாழ்கைக்காக 25ம் தேதி அயோத்தியில் ஒரு சிறு பொறி பற்ற வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தீப்பொறி பரவி எத்தனை உயிர்களை பலிவாங்கப் போகிறேதோ என்ற அச்சம் எழுகிறது.

அயோத்தியில் 16ம் நுாற்றாண்டு வரை ராமர் கோயில் இருந்தது. அதற்கு தேவையான வரலாற்று, தொல்பொருள், இலக்கிய சான்றுகள் உள்ளன. அதை இடித்து 1528ல் முகலாய மன்னர் பாபரின் படை தளபதி மீர்பாகி பாபர் மசூதியை கட்டியதாக ராமர் கோயிலில் இருந்த 3 கல் வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

1949ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி  மசூதியின் உள்ளே ராமர், லெட்சுமணன், சீதை , அனுமன் சிலைகள் வைக்கப்பட்டன. அன்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தொழுகைக்கு தடைவிதித்தது. மேலும் அன்றிலிருந்து இன்று வரை, ஏன் நாளையும் கூட அங்கே வழிபாடுதான் நடைபெற்று வருகிறது.

வழிபாடு இல்லாத மசூதி, பல ஆண்டுகளாக அதற்கு உள்ளே மாற்று மதத்தின் சிலை இருந்த தலம் போன்று பல காரணங்களால் அது மசூதியாக இருந்தாலும் இஸ்லாமியர்களின் சட்டப்பட்டி, அதற்கான அங்கீகாரத்தை பல ஆண்டுக்கு முன்பே இழந்து விட்டது.

இன்னொருபுறம் ராமன் பிறந்த இடம் என்பது இந்துக்களின் மெக்கா, மெதினா போன்றது. அயோத்தி, மதுரா, காசி ஆகிய ஊர்களில் ஆக்கிரமிப்பி்ல உள்ள கோயி்ல்களை  மீட்க வேண்டும் என்பது இந்துக்கள் நம்பிக்கையில் இரண்டற கலந்து விட்ட உணர்வு. ஆனால் நம் அறிவுஜீவிகள், .மெத்தபடித்த கணவான்கள் இந்துக்கள் வேறு, சங்க் பரிவார் அமைப்பினர் வேறு என்று பேசி வருவது மாய்மாலம் ஏதோ இது ஒரு குழுவிவகாரம் போல சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் அனைத்து இந்துக்களின் உணர்வும் இது தான்.

இந்து முன்னணியின் முன்னாள் செயலாளர் மறைந்த முத்துவேல் கூறுவது போல இந்தியாவில் இருப்பவர்கள் இன்றைய இந்துக்கள், அல்லது நேற்றைய இந்துக்கள், இன்றைய கிறிஸ்தவ, முஸ்லீம்கள் தான். அதனால் ராமர் கோயிலோ, கிருஷ்ணர் கோயிலோ, சிவன் கோயிலோ அனைவருக்கும் சொந்தமானது தான். ஆனால் இந்த விவகாரத்தை இப்படி அணுகுபவர்கள் தான் இல்லை.

அயோத்தி இயக்கத்தை சங்க பரிவார் அமைப்புகள் வெகுஜனஇயக்கமாக மாற்றிய 1980களுக்கு முன்பு வரை சுமார் 450 ஆண்டு காலம் இந்துக்கள் ராமர் கோயிலை மீட்க சிறு சிறு போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர். சுதந்திர இந்தியாவில் 1950ம் ஆண்டே ராமர் கோயிலில் வழிபாட்டு நடந்த அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுவரை இந்த போராட்டத்தில் பல லட்சம் இந்துக்கள் உயிர் இழந்துள்ளனர்.

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி் கரசேவைக்கு பல இயக்கங்கள் அழைப்பு விடுத்தன. அந்த அழைப்பின் படி அயோத்தியில் குவிந்த தொண்டர்கள் மசூதியை இடித்து தள்ளினர். பின்னர் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அதனை வெற்றி விழாவாக கொண்டாடுவதற்கு பதிலாக மனவேதனையையே வெளிப்படுத்தினர் என்பது குறிப்படத்தக்கத்து. மசூதியை  இடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள் ஏன்  கரசேவைக்கு அழைப்பு விடுத்தார்கள்.

மற்றொருபுறம் இஸ்லாமியர்களும் தொடர்ந்து இந்த விவகாரத்தில் போராடியே வந்துள்ளனர். அவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் அரசும், ஆட்சியாளர்களும் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். 1992 டிசம்பர் 6ம் தேதிக்கு பின்னர் இஸ்லாமியர்கள் .போராட்டம் வலுத்தே இருந்துள்ளது. அதன் பிறகு நாட்டில் நடக்கும் ஒவ்வொரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் அயோத்தி மட்டும் காரணமாக காட்டப்படுகிறது. களம் இறங்கி போராடுவது ஒருபுறம், கருத்து உருவாக்குவதில் அவர்கள் தொடர்ந்து தீவீரமாகவே ஈடுபடுபது என்று இஸ்லாமியர்கள் திட்டமிட்டு செயல்படுகின்றனர். அவர்களுக்கு என்று சில இந்துகளும் துணை போகின்றனர்.  தமிழகத்தில் கூட ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி நடக்கும் பாபர் மசூதி மீட்பு போராட்டங்கள் இஸ்லாமியர்கள் எந்த வித உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்பது சான்று.

 லோக்சபா தேர்தலில் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற பாஜ படிப்படியாக ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு உயர்ந்ததில் அயோத்தி விவகாரம் முக்கியமாக பின்புலத்தில் இருந்தது. 1996 மே 16ம் தேதி முதல் 1–ஜூன் 1996 வரை வாஜ்பாய் பிரதமராக இருந்த பாஜ ஆட்சியில் எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்காமல் ஆட்சியை இழந்தற்கு காரணம் அக்கட்சியின் அயோத்தி பற்றிய நிலைப்பாடுதான் காரணம்.

 1992ம் ஆண்டுக்கும் முன்பு இருந்து வரை இன்று வரை பல லட்சம் இந்துக்கள் ராமர் கோயில் நிச்சயம் கட்டப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதே போல கோயில் கட்டப்படும் உயிர் நீத்த ஆன்மாக்களும் அதே எதிர்பார்ப்பில் தான் உள்ளன. தற்போது மத்தியிலும், மாநிலத்திலும்  பெரும்பான்மை பலத்துடன் பாஜ ஆட்சியை பிடித்துள்ளது. அதே நேரத்தில் ராஜசபாவில் பாஜக நிலை அவ்வளவு நன்றாக இல்லை. பாஜ மைனாரிட்டி அரசாக இருந்த போது அதனால் தான் ராமர் கோயில் எழுவது தடைப்பட்டுள்ளது என்று எண்ணியவர்கள் கூட தற்போதைய நிலையில் ஏன் கோயில் கட்டவில்லை என்று ஆவேசம் காட்டுகிறார்கள். இதன் காரணமாகத்தான் 25 ம் தேதி  சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்ற தர்மசபா அயோத்தியில் கூடியது. அந்நேரத்தில் சிவசேனாவும் கூட்டம் நடத்தியது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜ ஆட்சி நடப்பதால் கூட்டம் அமைதியாக முடிந்தது. முலாயம் சிங் போன்றவர்கள் ஆட்சியில் இருந்தால் இந்த கூட்டத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கும்.

மசூதி இடிப்பு என்பது ஒரு மணி நேரத்தில் அல்லது ஒரு நாளில் முடிவடைந்து விடும். அதிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் பறிபோய்விட்டது. ஆனால் கோயில் கட்டும் பணியிலும் அதே போல எழுத்தேன் கவிழ்த்தேன் என்று தலைவர்கள் முடிவு எடுப்பதை கைவிட வேண்டும். உங்கள் வீராவேசமான பேச்சை நம்பி உயிரை இழக்கும் தொண்டனை பற்றி நீங்கள் கவலைப்படுதாக தெரியவில்லை. தியாகம் அடுத்தவன் உயிரைப் பறிப்பதில்லை இல்லை என்பதை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது அவசியம்.

அப்படி என்றால் அவர்கள் என்ன தான் செய்ய வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் ஒற்றுமைக் கோயிலாக, தன்மானக் கோயிலாக உருவாக வேண்டும். அதற்கு இந்து தலைவர்கள், இஸ்லாமிய தலைவர்களுடன் இணைந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். அது வரையில் ராமர் கோயில் விவகாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். தற்போது பாஜவிற்கு இஸ்லாமியர்கள் கூட ஓட்டுப் போடும் அளவிற்கு மனம் மாறிவிட்டடார்கள் என்பதை மனதில்வைத்து நடவடிக்கை எடுத்தால் அவர்கள் இணங்கி வருவார்கள். அது வரையில் கோயில் விவகாரத்தை ஆறப் போடுவது நல்லது.

ராஜீவ் காலத்தில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தை பாஜ புறக்கணித்த நிலையில் கூட ஜெயலலிதாவை இந்துக்களுக்கு ஆதரவாக பேசவைக்க கோவிந்தராசாரியா போன்றவர்களால் முடியும் போது தற்போது அவரைப் போன்றவர்கள் களம் இறங்கினால் இருசமயத்தவரும் இணக்கமாக கோயில் கட்ட முடியும். அயோத்தியில் கூடிய கூடிய தர்மசபா 2019ம் ஆண்டு பிரயாகையில் நடக்கும் கும்பமேளாவில் ராமர் கோயில் எப்போது கட்டப்படும் என அறிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள். அதுவரையில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் மத்தியில் இது பற்றிய கருத்துக்களை உருவாக்கும் முயற்சியில் தர்மசபா ஈடுபடவிட வேண்டும்.

அதை விடுத்து இதர விவகாரங்களில் பிரிந்து கிடக்கும் இந்து ஓட்டுக்களை மொத்தமாக அள்ளிவிடலாம் என்ற நினைப்பில் அயோத்தி விவகாரத்தை தூண்டிவிட்டால் அது நல்ல பலனை தராது. அதற்கு பதிலாக இஸ்லாமியர்கள் ஒன்றாக இணைந்து தங்கள் ஆதரவு ஆட்சியை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் அமர்த்துவார்கள். அந்த காலகட்டத்தில் ராமர் கோயிலை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close