ராகுல் எப்படி பிராமணர் ஆகமாட்டார் தெரியுமா? 

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 07:03 am
how-rahul-will-not-carry-gaul-gothra

ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல் புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலின் பூஜையில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த பூசாரி, ராகுலின் கோத்திரம் குறித்து கேட்க, தான் ஒரு கவுல் பிராமணர் என பதிலளித்த ராகுல், முன்னோர்களின் பெயர்களையும் (கையிலிருந்த ஆவணத்தின் உதவியுடன்) கூறினார்.  கவுல் எனப்படுவது காஷ்மீர் பிராமணர்களை குறிக்கும் சொல். சிறப்பாக பிறந்தவன் என்பது தான் இதன் நேரடி பொருள்.

திடீரென ராகுல் எப்படி கவுல் ஆனார். 

ராகுல் தான் ஒரு தத்தாத்ரேய கோத்ரத்தை சேர்ந்தவராக கூறுகிறார். இந்தக் கோத்திரம் காஷ்மீர் பிராமணர்களுக்கு உரியது. இந்த கோத்ரத்தில் பிறந்தவர்கள் தான் தங்களது பெயருக்கு பின் கவுல் சேர்த்துக்கொள்வார்கள். 

ஆனால், ராகுல், அவரது தந்தை ராஜீவ், ராஜீவ் தாத்தா நேரு, அவரது தந்தை மோதிலால் என யாருமே கவுல் என்ற வார்த்தையை தங்களது பெயருக்கு பின் பயன்படுத்தியதில்லை. 

மோதிலாலின் மூதாதையர் கவுல் தான், ஆனால் ராகுல் இல்லை...

மோதிலாலின் மூதாதையர், தத்தாத்ரேய கோத்ரத்தில் வந்தவர்கள் தான். அதாவது 1716ல் பண்டிட் ராஜ் கவுல் என்பவர், காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்து, அங்கு ஒரு கால்வாயை ஒட்டிய வீட்டில் வசித்தார். கால்வாய் என்பதை காஷ்மீரி மொழியில் நெஹர் என்பர். 

அங்கு வாழ்ந்த ராஜ் கவுலை, அந்த பகுதி மக்கள் நெஹ்ரு என்று அழைத்தனர். பின், காலப்போக்கில், கவுல் என்ற பெயர் மறைந்து ராஜ் நெஹ்ரு என்றே அழைக்கப்பட்டார். ராஜ் நெஹ்ரு வழி வந்தவர் தான், மோதிலால் நேரு. ஆக அவரது மகன் ஜவஹர்லால் நேருவும்  தத்தாத்ரேய கோத்ரத்தைச் சேர்ந்தவர் தான். இந்தக் கோத்திரம் ஜவஹர்லால் நேருவுடன் முடிவுறுகிறது. 

கோத்திரம் என்பது ஆண்கள் வழியில் வருவது. அதாவது பெண்கள், தந்தையின் கோத்ரத்தை கூற முடியாது. திருமணத்துக்கு பின் அவர்கள் கணவனின் கோத்ரத்துக்கு மாறுவர். நேருவின் மகள் இந்திரா பிரியதர்ஷினி திருமணம் செய்த பெரோஸ் ஜெஹாங்கிர் காந்தே ஒரு இந்து அல்ல. அவர் பார்சி இனத்தைச் சேர்ந்தவர். காந்தி என்பது அவரது குடும்ப பெயரில்லை. பெரோஸ் ஜஹாங்கிர் காந்தே என்பதை,  காந்தி என தாமாகவே மாற்றிக் கொண்டார் இந்திரா காந்தி. இதன் மூலம் நேரு குடும்பம் அடைந்த அரசியல் லாபத்திற்கு அளவில்லை. காந்தி என்ற அடையாளத்துக்கு சொந்தமில்லாத நிலையில் அந்தப் பெயரைச் சூடிக்கொண்டதால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் புகழையும் மரியாதையையும் நேருவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு உரியதாக ஆக்கிக்கொண்டனர்.

இந்திராவை திருமணம் செய்த பின், பெரோஸ் காந்தி, இந்து மதத்துக்கு மாறிவிட்டதாகவும் ஒரு கதை வளம் வந்தது. ஆனால், 'திருமணத்துக்காக மதம் மாறுவது சரியல்ல' என்பது நேருவின் கொள்கை. அதனால், பெரோஸ் மதம் மாறவில்லை.  அவர் மாறியதற்கான ஆதாரங்கள் எதுவும் கூட இல்லை.

பார்சியான பெரோஸ், ஒரு வேளை இந்துவாக மதம் மாறி இருந்தாலும் கூட, நேருவின் கோத்திரம் அவருக்கு  பொருந்தாது அதை  மருமகனான அவர் சொந்தம் கொண்டாடவும் முடியாது. தற்போது இந்தக் கோத்திர பேச்சு எழுந்துள்ள புஷ்கர் கோயிலுக்கு இந்திரா வந்திருக்கிறார். அப்போது, 'என்ன கோத்ரம்?' என பூசாரி கேட்டபோது, அப்பாவின் கோத்ரத்தையே அவர் கூறி வழிபட்டுள்ளார். 

இந்திராவின் மகன்கள் ராஜீவ், சஞ்சய் ஆகியோர் இதற்கு உரிமை கோரியதும் இல்லை, அந்த உரிமையும்  பாரதீய கலாசார மரபுப்படி, பார்சீ ஒருவருக்கு பிறந்த இந்திராவின் வாரிசுகள் கோரவும் முடியாது. அப்படி இருக்க அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ராகுலுக்கு திடீரென தனது தாத்தா நேருவின் தத்தாத்ரேய கோத்ரம் எப்படி பொருந்தும். பிரமாணர்களுக்கு உரிய தத்தாத்ரேய கோத்திரம் என்ற  அடையாளம் நேருவோடு முடிந்து போன ஒன்றாகும். 

தற்போது ராகுல் செய்வது  மக்களை ஏமாற்றும் செயல். அவருக்கு தொடர்பில்லாத ஒன்றை தொடர்புபடுத்திக் கொள்வதன் மூலம் இந்திய மக்களோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பிகிறார். மேலும், பாரதிய ஜனதா கட்சி தன்னை ஹிந்துக்களின் கட்சியாக அடையாளப்படுத்தி வருவதாக நினைத்து, தேர்தல் நேரங்களில் மட்டும் தன்னை ஹிந்துவாக நிலைநிறுத்திக்கொள்ள மேற்கொள்ளும் ஏமாற்று அரசியல் மட்டுமே இது என்பதை அவரது முயற்சியின் மூலம் நம்மால் அறிய முடிகிறது. மேலும் ஹிந்துக்கள் அனைவரும் பிராமணர்கள் கிடையாது. இந்த பிராமண அடையாளம் வாக்கு வங்கியை நிரப்பி விடும் என்ற ராகுலின் நம்பிக்கை அவரது அரசியல் அறியாமையையும். நம் பாரம்பரிய கலாசாரம் குறித்த புரிதலின்மையையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது எனத்  வெளியில்  தற்போது முழுவதும் தெரிய வந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close