தரம் தாழ்ந்து கொண்டே போகும் காங்கிரஸ்!

  Newstm Desk   | Last Modified : 29 Nov, 2018 05:22 pm

congress-controversial-statements-on-modi

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, மதசார்பற்ற கட்சி என்று கூறிக் கொண்டே பிரித்தாளும் வேலையை கச்சிதமாக செய்துவிடும். அதற்கு பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு ஆதாரங்கள் உண்டு. சமீப காலமாகவே விமர்சிப்பதற்கு விஷயங்கள் இல்லாமல் பிரதமர் மோடியின் பெற்றோரை தரம் தாழ்த்தி பேசி வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சி.பி.ஜோஷி சமீபத்தில் பேசுகையில், பிரதமர் மோடி, அமைச்சர் உமா பாரதி, பெண் சாமியார் சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு இந்துமதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சர்ச்சையாகப் பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுமே கண்டனம் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் அக்கட்சியை சேர்ந்த சி.பி. ஜோஷி, இந்துக்கள் மீது அக்கறைக் கொள்ள பிராமணர்களால் மட்டும் தான் முடியும். பிரதமர் மோடி, அமைச்சர் உமா பாரதி, பெண் சாமியார் சாத்வி ஆகியோருக்கு இந்துமதத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர்கள் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மக்கள் அவர்களை அங்கீகரிக்க கூடாது என்று விஷமமாக தரம் தாழ்த்தி பேசி இருந்தார்.  இவர் தான் டிசம்பர் 7ஆம் தேதி ராஜஸ்தான் சட்டப்பேரவைக்காக  நடக்க உள்ள தேர்தலில் நத்துவாரா தொகுதி வேட்பாளர். 

இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுமே கண்டனம் தெரிவித்து, உடனடியாக வருத்தம் தெரிவிக்க உத்தரவிட்டார். இத்தகைய பேச்சுகளும் அதன் பின் வரும் வருத்த தெரிவிப்பும் காங்கிரஸ் கட்சியில் அசாதாரணமாக வருவது தான். ஆனால் பாஜக, தரப்பில் இந்தப் பேச்சுக்காக சி.பி. ஜோஷி, அடுத்த ஒரு மணிநேரத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் காங்கிரஸ் மேலிடம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதன் பலனாக தேர்தல் ஆணையம் ஜோஷி மீது, வழக்கு தொடர்ந்துள்ளது. அதற்கு வரும் 2ஆம் தேதிக்குள் அவர் விளக்கம் அளித்ததாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே, காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் பிரதமர் மோடியின் அம்மா வயதுபோல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து செல்கிறது என்று பிரதமர் மோடியின் தாயாரை அவதூறாய்ப் பேசினார். 

இதற்கு பதிலடி தரும் வகையில், ராகுலின் மனதை கவர காங்கிரஸ்காரர்கள் எனது பெற்றோரை வசைப்பாடுகின்றனர் என்றார்.

காங்கிரஸ் கட்சியினர் இது போல அநாகரீகமாக பேசுவது ஒன்றும் புதிதல்ல.  அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் கூட அவ்வாறு பேசியுள்ளார். ''மரணத்தின் வியாபாரி மோடி'' என முதன் முதலில் விமரிசித்தது சோனியா தான். இதனை அவருக்கு எழுதிக் கொடுத்தவர் பாலிவுட் பாடலாசிரியர் ஜாவீத் அக்தர் (இவர் ஷபானா ஆஸ்மியின் கணவர்). 

2014ஆம் தேர்தல் பிரசாரத்தின் போது இது போல வந்த வசைகள் ஏராளம். அப்போது இருந்த மோடி அலையைக் கண்டி வாய்க்கு வந்தபடி எல்லாம் காங்கிரஸ் கட்சியினர் உளறினார். "மோடி ஒரு சாய்வாலா. காங்கிரஸ் அலுவலகத்தில் வந்து டீ விற்க சொல்லுங்கள்" என்றார் அக்கட்சியின் மூத்த அரசியல் தலைவர் மணிசங்கர் ஐயர். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், மோடியை நீசன், மோடி நீச சாதி, ஆக, இந்து மதம் பற்றி மோடி போன்ற தாழ்ந்த சாதியினர் வாய் திறக்க கூடாது. 

மோடியின் அப்பா யாரென்றே தெரியாது. ஆனால் ராகுலின் தந்தை, பாட்டி, கொள்ளு தாத்தா என அனைவருமே பிரபலமானவர்கள் என்றனர். மோடியின் தாயையும் விட்டுவைக்கவில்லை. இவ்வாறு தரம் தாழ்த்தி விமரிசிப்பதையே பெரிய சாதனையாக கொண்டிருப்பவர்கள் தான் காங்கிரஸ் கட்சியினர். இவர்களது அரசியலை மக்கள் புரிந்துகொண்டு முடிவெடுத்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் ஒரு முறை தரம் தாழ்ந்த காங்கிரஸ் அரசியலுக்கு மக்கள் செவி மறுக்கமாட்டார்கள். 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.