இந்தியாவை 17 பகுதிகளாக துண்டாட நினைத்த கட்சி எது தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 01:55 pm

communists-wanted-to-divide-india-into-17-countries

இந்தியாவை கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர நாடாக முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. சுதந்திரம் பெற்று 4 ஆண்டுகள் கழித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி 1951ஆம் ஆண்டு தான் அதனை அக்கட்சி ஒப்புக்கொண்டது. ஆந்திர பிரதேசத்தில் அவர்கள் முன்னெடுத்த கலக புரட்சி அவர்களுக்கு பலன் தராமல் போன நிலையில்தான் அவர்கள் இந்தியாவை சுதந்திர நாடாக ஒப்புக்கொண்டனர். அதற்கு அவர்கள் இங்கு செய்த குழப்பங்களும் சூழ்ச்சிகளும் ஏராளம். 

குறிப்பாக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய இருக் கட்சிகளுக்கும் கே.ஜி.பி என்ற ரஷ்ய உளவு அமைப்பு நிதி அளித்து வந்ததை மிட்ரொக்கின் என்ற ஆவணவியலாளரின் குறிப்புகள் அம்பலப்படுத்துகின்றன. 

1952ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 'ரேடியோ மாஸ்கோ', கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேரடி பிரசாரத்தில் ஈடுபட்டது. முதலில் பிரிட்டன் ஆட்சியாளர்களை எதிர்ப்பது போல இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, பின்னர் அவர்களை மனப்பூர்வமாக ஆதரித்தது. பிரிட்டன் ஆட்சியாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளால் 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' தோற்கடிக்கப்பட்டது.  இந்த உடன்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்ட்காரர்கள் அனைவரும் அப்போது விடுவிக்கப்பட்டனர். 

17 துண்டுபோட திட்டம் 

முகமது அலி ஜின்னாவின் இரண்டு நாடு என்ற கொள்கை போல கூட அல்ல, இந்தியாவை 17 தனி நாடுகளாக்கவே கம்யூனிஸ்ட் கட்சி நினைத்தது. இதற்கான திட்ட முன்மொழிவை அவர்கள் 1946ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் அளித்தனர். நாடெங்கும் இதற்கான ஆராவராத்தை அவர்கள் முன்னெடுத்தனர். அதாவது சீக்கிஸ்தான், டார்ஜிலிங், வங்கம், காஷ்மீர் என்பது போல தனி நாடுகளாக பிரிக்க வேண்டும் என்று அவர்கள் அறிக்கை அளித்தனர். 

கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவான ஜவஹர்லால் நேரு, மகாத்மா காந்தியின் விருப்பத்திற்கு மாறாக இந்த பிரிவினைக்கு ஆதரவு அளித்தார். நேரு தான் ஒரு தீவிர கம்யூனிஸ்ட்வாதி என பல இடங்களில் உறுதி செய்துள்ளார். அதாவது அவர் கம்யூனிஸ்ட் கொடி பிடிக்கும் அளவு ஆக்கட்சிக்கு ஆதரவாளர் ஆவார். அப்போது இது குறித்து விசாரிக்க சிஐஏ தலைமைக்கு அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி ட்ரூமன் கூட சம்மன் அனுப்பினார் என்றால் அந்த அளவுக்கு நேரு அந்தக் கட்சிக்கு விசுவாசி. 

1962ல் அமெரிக்க அதிபராக இருந்த ஜான் கென்னடி இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்கினார். அப்போது நேருவுடன் இருந்த முரண்பாடுகளையும் கடந்து, அமெரிக்கா இந்த ஆயுத விநியோகத்தை செய்யக் காரணம் இந்தியாவை சீனா கையகப்படுத்தக் கூடாது என்பதனால் தான். இதனை அமெரிக்கா முன்னதாகவே ஊகித்தது. அதற்கு முன்னதாக சர்தார் வல்லபாய் பட்டேல், சீனாவை நம்ப வேண்டாம் என நேருவுடம் கூறினார். ஆனால் நேரு அதை தெரிந்தும் தெரியாதவாறு உதாசினப்படுத்தினார். 

கிழக்கு வங்காளம் முழுவதும் சதுப்பு நிலங்களாலும் தேவையற்ற மரங்களாலும் அசுத்தமான தண்ணீராகவும் இருப்பதால் இந்தியாவிலிருந்து அந்தப் பகுதியை நீக்கி விடலாம் என்று நேரு டாக்டர். ராம் மனோகர் லோஹியாவிடம் கூறியுள்ளார். 

இமய மலையில் உள்ள சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியையும் நேரு இதே போல தான் மகாதேவா ரானடேவிடம் தெரிவித்தார். இப்பகுதி இன்றும்  இந்திய-சீனா உறவில் மீண்டும் சர்ச்சையாக உள்ளது அனைவரும் அறிந்தது. 

காஷ்மீரை சோவியத் ரஷ்யாவின் பகுதியாக இருந்திட கம்யூனிஸ்ட் வேண்டியதாக 1952 ஆண்டில் வெளியான சி.ஐ.ஏ. ஆவணங்கள் குறிப்பிடுகிறது. 

1959ல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அஜய் கோஷ், மிக அதிக அளவில் லாபம் ஈட்டும் வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் சோவியத் ரஷ்யாவுடன் மட்டுமே உடன்படுக்கைகளை கொண்டிருந்தது. 

1959ல் நிறுவப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்துக்களை தீவிரமாக எதிர்த்த முஸ்லீம் வெறியரான டாக்டர் நூல் ஹசனை துணை வேந்தராக கொண்டது. அவரும் கம்யூனிச கோடி ஏந்திய நபர் தான். அன்றும் இன்றும் அந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். இன்று ஐசிஎச்ஆர்/ ஐசிசிஆர்/ ஐசிபிஆர்/ என்சிஆர்டி என அனைத்து கல்வி அமைப்புகளிலும் இந்துக்களுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் கம்யூனிச வெறியர்கள் ஊடுருவியுள்ளனர். வரலாற்றில் உருச்சிதைவை ஏற்படுத்துவதுடன் பாடத்திட்டங்களிலும் அது திணிக்கப்பட்ட முயற்சிகள் நடக்கின்றது. 

கம்யூனிஸ்ட்கள் பிளவுபட காரணம் என்ன? 

இந்தப் பிளவும் நாட்டை கூறுபோட ஏற்படுத்தப்பட்டது தான். அதாவது சோவியத் ரஷ்ய வளர்ச்சி மாதிரியை பின்பற்ற வேண்டும் என நினைத்தவர்கள் இ.கம்யூனிஸ்டாகவும் சீன வளர்ச்சி மாதிரியை பின்பற்ற நினைத்தவர்கள் மா.கம்யூனிஸ்டாக பிரிந்தனர். ஆனால் அப்போது இருந்த காலகட்டத்தில் இந்த இரண்டு வகையான கம்யூனிஸ்ட் கொள்கைகள் கொண்ட நாடுகளும் ஏழ்மையிலும் பஞ்சத்திலும் தவித்தன. 

1962ல் நடந்த இந்திய - சீன போரில் நமது வீரர்கள் எல்லையில் வீழ மா.கம்யூனிஸ்ட்டும் காரணம். இவர்கள் இந்தியத் தெருக்களில் சீனாவுக்கு ஆதரவான பிரசுரங்களை அளித்தனர்.  இந்தியா சீனாவுக்குள் ஊடுருவுவதாக இந்தியாவிற்குள் இருந்தே முழங்கினர். இந்தப் போர் பற்றி ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ வரலாற்றை எழுதிய எஸ்.கோபால் இவ்வாறு குறிப்பிடுகிறார், "நடந்தவை அனைத்தும் மிக மோசமானவையாக இருந்தன, அவை உண்மையில் நடக்காமல் இருந்திருந்தால், நம்பவே முடிந்திருக்காது".

ஆனால் நடைபெற்ற தவறுகள், அப்போதைய இந்தியக் குடியரசுத்தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன், மத்திய அரசை கடுமையாக சாடும் அளவில் இருந்தது. சீனாவை சுலபமாக நம்பியதற்கும், உண்மைகளை புறக்கணித்ததற்காவும் அவர் அரசைக் கடுமையாக விமர்சித்தார்.  அப்போது தான் ஆர்எஸ்எஸ் இவர்களுக்கு எதிராக எழ்ச்சி பெற தொடங்கியது. பின்னாளில் நேருவின் பாராட்டியே ஆர்எஸ்எஸ் பெற்றது. 

மா.கம்யூனிஸ்ட் புது டெல்லியில் இருந்த சோவியத் ரஷ்ய துணை தூதரகத்துடன் ரகசியத் தொடர்பில் இருந்ததாக 1958ஆம் ஆண்டின் அமெரிக்க புலனாய்வு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இந்திய படைகளுக்கு உள்ளேயே கொரில்லா குழுக்களை ஏற்படுத்தி வைத்து அதன் கொண்டு போர் சமயத்தில் சீனாவுக்கு ஆதரவாக போவதே இவர்களது திட்டம். 

1962ல் நடந்த இந்திய - சீன போரில் நமது படை வீரர்கள் எல்லையில் வீழ்ந்திட இவர்களே முழுக் காரணமும். இந்தத் திட்டம் 1958லேயே சோவியத் ரஷ்ய தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதே போல 1959ல் மா.கம்யூனிஸ்ட் பொது செயலாளராக இருந்த பி.டி.ஆர் சீன துணை தூதரகத்துக்கு அறிவுறுத்தியது 
போர் நேரத்தில் பலன் தரவில்லை. 

1960ஆம் ஆண்டு ஜோதி பாசு, எச்கேஎஸ் சுர்ஜித், பி.டி.ஆர்  ஆகியோர் சீனாவுக்கு ஆதரவு தர மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர்களை வெளிப்படையாக அழுத்தம் தந்தனர். ராணுவத்தில் கொரில்லா படையை ஏற்படுத்தி அதன் மூலம் சீனாவுக்கு உதவியவர் சுர்ஜித். ஆனால் நமது வல்லமை மிகுந்த ராணுவமும் தேசபக்திக் கொண்ட ராணுவ தலைமை அதிகாரிகளும் இந்த சதித் திட்டத்தை முறியடித்து சதி செய்தவர்களை சிறை கம்பிகளுள் அடைத்தனர். 

இந்த விவகாரங்கள் அனைத்து மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக சென்றிடக் கூடாது என்பது ஜவஹர்லால் நேரு உறுதியோடு இருந்தார். அவரது ஆட்சியில் ஊடக அடக்குமுறை தலைவிரித்தாடியது. தங்களுக்கு சாதகமான கட்டுரைகள் மட்டுமே இடம்பெற வேண்டுமென அவர்களுக்கு தேவையான ஆட்கள் மட்டுமே பத்திரிகைகளில் நியமிக்கப்பட்டனர். அப்படி தான் பத்திரிக்கை துறையில் சிறிதும் அனுபவம் இல்லாத தனது மருமகன் பெரோஸ் காந்தியை இந்தியன் எக்ஸ்பிரஸில் நேரு நியமித்தார். நேரு பத்திரிக்கை சுதந்திரத்தின் தீர்க்க தரிசி என பெரோஸ் காந்தி புகழ இதுவே காரணம். 

இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின் மையப் புள்ளியாக இருந்தவர் நேரு தான்.  அவரது இந்த இழிவான மரபை தான் அவரது மகள் இந்திரா காந்தியும் அடுத்த இரண்டு தசாப்தங்களாக முன்னெடுத்து சென்றார். 

Newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.