• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

குஜராத்தில் சோமநாதர் ஆலயம் அமைந்தது போல், ராமருக்கும் அயோத்தியில் ஆலயம் அமையுமா?

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 07:41 pm

the-somnath-temple-was-reconstructed-despite-opposition-in-the-past

அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்ம பூமி சர்ச்சைக்குரிய நிலமாக உள்ளது போல தான் குஜராத் சொமநாதார் கோயிலும் அதன் நிலத்தில் சர்ச்சையைக் கொண்டது தான். ஸ்ரீ  ராமர் கோயில் கட்டுவது குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் இழுத்தடித்து வருவது போல தான் 1948 நடந்த சோமநாதர் கோயிலின் மறுக்கட்டமைப்பு பலத்த எதிர்ப்புகளால் முடக்கப்பட முயற்சிகள் நடந்தன. இன்றைய சூழல் சோமநாதர் கோயில் கட்ட நடந்த போராட்டத்தை நினைவூட்டுகிறது. 

படம்: பழங்கால சோமநாதர் கோயில்

 

சோமநாதர் கோயிலின்  பெருமிதம்!

குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில் பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று .  அதிலும் முதன்மையானதும்  மிகப் புராதனமானதும்  ஆனது இந்தப் புனிதத் தலம்.  இதைப் பற்றிய குறிப்புகள் ஸ்கந்த புராணம், ஸ்ரீமத் பாகவதம், சிவ புராணம் ஆகிய நூல்களில் வருகின்றன. ரிக் வேதத்தில்கூட இது மற்ற பெரிய தலங்களுடன் ஒப்பிடப்படுகிறது. பிரபாஸ் தீர்த்தம் என்றும் இது வழங்கப்படுகிறது.

இந்தக் கோயில் திரேதா யுகத்தில் ராவணனால் வெள்ளியிலும், துவாபர யுகத்தில் கிருஷ்ணரால் மரத்திலும், பின் கலியுகத்தில் பீமதேவன் என்னும் அரசனால் கல்லினாலும் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. வரலாற்றில் கி.மு 1169ல்  மன்னர்களால் செம்மையாக்கப்பட்டு, பின் 1300 கி.மு வில்  ஆலாவுதீன் கில்ஜி  என்ற படையெடுப்பாளரால் சிதைக்கப்பட்டு பின், தொடர்ந்து பல தாக்குதல்களை எதிர்கொண்டது. 

மிகுந்த செல்வச் செழிப்பு வாய்ந்த இந்தக் கோயில் குறித்து பெஞ்சமின் வாக்கர் என்னும் வரலாற்றாசிரியர் தன் புத்தகத்தில், “லிங்கத்தின் மேல் விலையுயர்ந்த அணிகலன்கள் பொருந்திய தங்க மாலை போர்த்தப்பட்டிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

இத்தகைய வளம் தான் இதன் மீதான தக்குதலுக்குக் காரணமாக வும் அமைந்தது.  கஜினி முகம்மது, பக்தியார் கில்ஜி, முகம்மது பின் துக்ளக் என்று பலரால் தாக்கப்பட்டு, கடைசியாக 1547-ல் போர்ச்சுக்கீசியரால் அழிக்கப்பட்டது. இப்படிப் பல முறை தாக்குதலுக்கு உட்பட்டுச் சிதைந்தாலும் இந்தக் கோயில் ஒவ்வொரு முறையும் புதுப் பொலிவுடன் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பல தலைவர்கள் அடக்குமுறையை எதிர்த்து போராடிய வரலாறு  மறைக்கப்பட்டுவிட்டது. அதே கதை தான் ஸ்ரீராமர் கோயில் விவகாரத்திலும் இப்போது நடக்கிறது. 

இந்த விவாதம் கே.எம். முன்ஷி மற்றும் ஜவஹர்லால் நேரு இடையே நடந்தது. இதனை அவர் தனது 'சுதந்திரத்திற்கான யாத்திரை' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், ''1922ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் உடைப்பட்டிருந்த சோமநாதர் கோயிலுக்கு சென்றேன். ஒரு கோயில் நாசப்படுத்தப்பட்ட்டு, எரிக்கப்பட்டும் மற்றும் உடைக்கப்பட்டும் இருந்தது. ஆனால் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. அதன் சபா மண்டபத்தில் நடந்துகொண்டிருந்தபோது அந்தக் கோயில் எரிக்கப்பட்ட அந்த மோசமான சம்பவத்தை உணரக் கூடிய வகையில் இருந்தது அங்கிருந்து சிதைவுகளை காணும்போது. 

படம்: 1869 ஆம் ஆண்டு சிதைக்கப்பட்டு மசூதியாக மாற்றப்பட்டது. - அரசு காப்பகப் படம்

1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு நாள் நான் சர்தார் வல்லபாய் படேலை சந்தித்தேன். அப்போது ஒரு தொலைபேசி செய்தி வந்தது. அதாவது குஜராத்தில் உள்ள ஜுனாகத் நகரம் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வர சர் ஷா நவாஸ் பூட்டோ அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. அதனை படேல் என்னிடம் கூறும்போது, நான் அப்போது ஜெய் சோம்நாத்!! என்றுக் கூறினேன். 

அப்போது பாரதத்தின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேலின் முன்மொழிதல்படி சோமநாதர் கோயில் மறுக்கட்டமைப்பு நடந்தது. இந்தத் திட்டம் முன்ஷியால் போடப்பட்டு மத்திய அமைச்சகத்தின் ஒப்புதலோடு குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் இப்பணியை தொடங்கிவைத்தார். அனால் அப்போதும் இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. 

1947ல் சவுராஷ்டிரா மக்களிடையே ஒரு பொதுக் கூட்டத்தில் படேல் பேசினார். இங்கு நாம் சோமநாதர் கோயிலை மீண்டும் கட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். அதற்கு சவுராஷ்டிரா மக்களாகிய நீங்கள் உங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்று சூளுரைத்தார். 

இந்தக் கோயில் வெறும் பாரம்பரிய சின்னம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தின் இதயமாக உள்ளது. இதனை மறுக்கட்டமைப்பு செய்ய வேண்டும் என்பது தேசத்தின் கொள்கை என்று முன்ஷியும் நினைத்தார். ஆனால் ஜவஹர்லால் நேரு இதனை எதிர்த்தார். என்னை அழைத்த நேரு, ''சோமநாத கோயிலை மறுக்கட்டமைக்க நான் விரும்பவில்லை. அப்படி செய்தால் அது இந்து மதத்தை மறுமலர்ச்சி அடைய செய்வதாய் அது இருக்கும்'' என்று கூறினார். 

படம்: சோமநாதர் ஆலயத்தை பார்வையிடும் படேல். 

அன்று பாரதத்தில் நிலவிய இரு வேறு எண்ணங்களின் பிரதிபலிப்பாக தான் படேல், முன்ஷி மற்றும் நேருவின் அந்தக் கருத்துக்கள் இருந்தன. அதற்காக நேரு பாரதத்துக்கு எதிரானவர் என்றில்லை. அவர், பாரதம் குறித்த அவரது எண்ணங்கள் அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு தகுந்ததாக தான் இருந்தது. மற்ற இருவரது எண்ணங்கள் இந்த மண்ணின் கலாசாரத்தின் வேராக இருந்தது. 

இதற்காக முன்ஷி நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். ''காந்திஜி மற்றும் சர்தார் இருவரும் இந்த திட்டம் குறித்து முழுவதுமாக ஆலோசித்துவிட்டனர். இதில் 
கோயில் கட்ட, மக்களிடமிருந்து நிதி திரட்டப்பட வேண்டும் என்பதை தவிர. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்திய அரசாங்கமே கோயில் கட்டமைப்புக்கான நிதியை அளிப்பதாக இருந்த முடிவு கைவிடப்பட்டது. 

சோம்நாத் குறித்து நீங்கள் அமைச்சகத்தில் என்னிடம் பேசியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனது விருப்பத்தையும் எண்ணத்தையும் என்னோடு மட்டுமே வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. ஒரு மத அடையாளமாக, கலாசார கல்வெட்டாக, பல்கலைக்கழகமாக அல்லது விவசாய திட்டமாக சில நல்லவை செய்யப்பட வேண்டும் என்றே நான் இங்கு இருக்கிறேன். சோமநாதர் கோயிலை மீண்டும் கட்ட வேண்டும் என்பது பாரதத்தின் ஒட்டுமொத்த எண்ணமும். இந்திய அரசின் உதவியோடு நாம் இதனை செய்வோம். செய்கிறோம்

நீங்கள் இது ''இந்து மதத்தின் மறுமலர்ச்சி ஆகிவிடும்'' இதில் உங்களது எண்ணம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் இதுவரை இதில் நியாயப்படியே நடந்துக்கொள்கிறேன். அதே நியாயத்தை நீங்கள் எனக்கு செய்தாக வேண்டும். இது வெறும் இந்துக்களின் விஷயமாக எண்ணக் கூடாது. 

இதனை இலக்கிய மற்றும் சமுதாய பணியின் மூலம் எனது தாழ்மையான வழியில் இந்து மதத்தின் சில அம்சங்களை வடிவமைக்கவோ, மறுகட்டமைக்கவோ இந்தியாவில் வருங்கால நவீன கட்டமைப்பில் தேசத்தை உருவாக்குவது அவசியம். 

நமது பழங்காலத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனைக் கொண்டு தான் தற்காலத்தையும் வருங்காலத்தையும் சிறப்பாக கட்டமைக்க முடியும். நமது பகவத் கீதையில் உள்ள  பழங்கால தொடர்புகள், கோயில்களும் கலாச்சாரமும் அழிந்துபோவதை பார்த்துக்கொண்டு பல லட்சக்கணக்கான மக்களை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்ல முடியாது. அது நமது வாழ்வியலை இழப்பதாகும்.''  என்று கடிதத்தில் முன்ஷி குறிப்பிட்டிருந்தார். 

படத்தில் கே.எம். முன்ஷி 

இந்தக் கடிதத்துக்கு அப்போது அமைச்சக ஆலோசகராக இருந்த வி.பி. மேனன் முன்ஷிக்கு பதில் கடிதம் எழுதினார்.  அதில், ''நான் உங்களது கடிதத்தை வழி மொழிகிறேன். இதற்காகவே வாழவும் தேவைப்பட்டால் நீங்கள் வெளிப்படுத்தியதை நிறைவேற்ற உயிரையும் தரத் தயார்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.  தொடந்து சோமநாதர் கோயிலின் மறுகட்டமைப்பு தொடங்கியது. 

பணி நிறைவடைந்து சிலையை நிறுவ வேண்டிய நேரத்தில், முன்ஷி குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்தை  தொடர்புகொண்டு அதற்கான சடங்குகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை விரும்பி மட்டுமே அவர் செய்தால் போதும் என்றுக் கூறினார். 

''நான் வந்து சிலை நிறுவ தேவையானவற்றை செய்யத் தயார். அது பிரதமரின் எண்ணம் எதுவாக இருந்தாலும் சரி. மசூதியோ அல்லது தேவாலயம் கட்டவோ எனக்கு அழைப்புவிடுக்கப்பட்டால்,  இது போலவே அதற்கும் செல்லத் தயார்.'' என்று ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார். அதற்கு ஜவஹர்லால் நேரு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். 

ஆனால் தான் கூறியபடி கோயிலில் சிலை நிறுவ ராஜேந்திர பிரசாத் வந்தார். அவர் அங்கு மேடையில் பேசியது அனைத்து பத்திரிகைகளிலும் பிரசுரமானது. ஆனால் அவை முழுவதுமாக அரசுக்கு ஏற்றவாறு தொகுக்கப்பட்டது. 

பேச்சுரிமையின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தவர் என போற்றப்படும் ஜவஹர்லால் நேரு, ஒரு குடியரசுத் தலைவரின் பேச்சை  அடக்குமுறை செய்தார்.  இப்படிதான், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அன்று சோமநாதர் கோயில் மறுகட்டமைக்கப்பட்டு இன்று தினமும் லட்சக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் போற்றும் வகையில் மிகச் சிறப்பாக நிற்கிறது. ஆனால் வரலாற்றில் இந்த கோயில் கட்டப்பட மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களும் தலைவர்களின் முயற்சிகளும் மறைக்கப்பட்டு, நேருவில் யோசனையால் 60 ஆண்டுகாலத்தில் பாரத தேசம் வளர்ச்சியை எட்டியதாக மட்டுமே உரக்க கூறப்பட்டு வருகிறது.  அதனை தான் ஊடகங்களும் பாடத்திட்டங்களும் தொடர்ந்து வழிமொழிந்து வருகின்றன. 

இன்று அயோத்தியில் ஸ்ரீராம ஜென்ம பூமியில் ராமருக்காக கட்ட வேண்டிய கோயிலுக்காக பணிகளை தொடங்க நடைபெற்ற இதே போராட்டம் அரசியல் ரீதியாக நடந்த நிலையில் தற்போது சட்ட போராட்டமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எனவே சோமநாதர் கோயிலுக்கு நடந்த அதே போராட்டம் அயோத்தி விவகாரத்திலும் நடந்து வருகிறது. அன்றைவிட இன்று சற்று அதிகமான எதிர்ப்பு காணப்படுகிறது. எனினும் சோமநாதர் கோயில் அமைந்த வெற்றித் தருணத்தை போல ஸ்ரீ ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராமர் கோயிலும் கம்பீரமாக எழுந்து நிற்கும். 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.