• குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னை, காஞ்சிபுரத்தில் சிபிஐ ரெய்டு
  • ஆர்.கே.நகர் தேர்தல் மோசடி; எஃப்.ஐ.ஆரில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் எங்கே? - உயர்நீதிமன்றம் கேள்வி
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • திருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு
  • மத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி!

கேன்சர் பிடியில் ரூபே கார்டு

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Dec, 2018 05:38 pm

rupay-card-in-cancer-situation

சேத்த பணத்த சிக்கனமா; செலவு பண்ண பக்குவமா; அம்மா கையிலேயே கொடுத்து போடு; சின்னக் கண்ணு; உங்க அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக் கண்ணு; அவங்க ஆற நுாறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு... என்று மக்களை பெற்ற மகராசி படத்தில் ஒரு பாடல் வரும். இது தான் இந்தியர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக எடுத்துக்காட்டும் வரிகள்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்கள் சம்பளம் வாங்கி அதை செலவு செய்து பாக்கி தொகை இருப்பதை வங்கியில் செலுத்தினார்கள். இதனால் வங்கியின் வருமானம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது சம்பளம் முழுவதும் வங்கியில் இருக்கும், செலவுக்கு போய் பணம் எடுத்துக் கொள்ளும் வாழ்க்கை முறை. இதனால் வங்கிகள் வளமான வாழ்க்கை வாழ்கின்றன.

இந்த சூழ்நிலையை புரிந்து கொள்வதற்காக கடன் கொடுக்கும் நபரிடம் போய் பணத்தை கொடுத்து காலையில் வாங்கிகிறேன் என்று சொல்லி கைமாத்து கொடுத்து பாருங்கள். மறுநாள் நம்ம பணம் முழுசா திரும்பி வரும், அவருக்கும் அது சிறிது வருமானம் ஈட்டி கொடுக்கும்.

இந்த நிலைக்கு வீதிகள் தோறும் உள்ள ஏடிஎம் மையங்கள் தான் காரணம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இடத்தில் ஏடிஎம் மையம் அமைக்க சுமார் 2 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் சார் கிரெட் கார்டு வாங்கி கொள்ளுங்கள்  என்று கூவி கூவி விற்பனை செய்தார்கள். இன்று அவ்வாறு இல்லை. பொருளாதாரத்தில் இந்த அளவிற்கு மாற்றம் வர 2 நிறுவனங்கள் தான் காரணம்.

அமெரிக்காவின் மாஸ்டர் கார்டு, விசாகார்டு ஆகியவை தான் காரணம்.  அமெரிக்காவை சேர்ந்த யுனைட்டெட் கலிபோர்னியா பேங்க், வேல்ஸ்  பேர்கோ, கல்போர்னியா வங்கி ஆகியவை இணைந்து மாஸ்டர் கார்டை தொடங்கின. அமெரிக்க வங்கி ஏற்படுத்தியது விசா கார்டு.

உலகம் முழுவதும் இந்த இரண்டு கார்டுகள் தான் டிஜிட்டல்  பணபரிவர்த்தனை முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 

இந்தியாவில் நாம் செய்யும் பரிவர்த்தனைக்கு வங்கிகள் அந்த நிறுவனத்திற்கு செலுத்துகின்றன. உண்மையில் அது வாடிக்கையாளர்கள் பையில் கையை விட்டு எடுத்து அவர்களுக்கு அளிக்கும். இதனால் நம் கண்ணுக்கு தெரிந்தே அமெரிக்க நிறுவனங்கள் வளம் பெற நாம் இது வரையில் தண்ணீர் உற்றிக் கொண்டிருந்தோம், வேறு வழியில்லாத காரணத்தால்.

மோடி சர்க்கார் இதற்கு தடை போட்டது. அமெரிக்காவின் சிலிகான் வேலியில் நடந்த நிகழ்ச்சியில் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள் மத்தியில் பேசிய மோடி, உங்கள் தகுதியும் திறமையும் இந்தியர்களுக்கு பயன்படும் வகையில் இந்தியாவிற்கு திரும்ப வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். அதை ஏற்றவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அவர்கள் உழைப்பில் உருவானது தான் டூ பே கார்டு மற்றும் யூபிஐ கார்டு.

டிஜிட்டல் இந்தியாவின் உயிர் நாடியாக இருந்த அட்டைகள் இருக்கின்றன. இவற்றில் செய்யப்படும் பரிமாற்றத் தொகை இந்தியாவிலேயே இருப்பில் வைக்கப்படுகிறது. ஆன்லைன் பண மோசடியில் வெளிநாட்டினர் ஈடுபடுவதும் மிக மிக குறைவு. இது போன்ற காரணங்களால் மத்திய அரசு ரூபே, யூபிஐ கார்டுகளுக்கு ஆதரவு வழஙகி வருகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் வேகமாக ரூபே கார்டு வளர்ச்சி பெற்று வருகிறது. இந்திய மக்கள் தொகையில் 50 கோடி பேர் தற்போது ரூபே கார்டு பயன்படுத்துகிறார்கள். டூபே கார்டின் வளர்ச்சி 2013ம் ஆண்டு 0.6 சதவீதம், தொடர்ந்து 2015ல் 14சதவீதம், 2018ம் ஆண்டு 50 சதவீத வளர்ச்சியை ரூபே கார்டு பெற்றுள்ளது.

இந்திய தேசிய கட்டண நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால் இந்த வளர்ச்சி போதுமானதா?. உண்மையில் இந்த கார்டின் வளர்ச்சி இவ்வளவுதான் என்ற கேள்வி எழுகிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு பாதிப்பு வரும் போது அதில் இருந்து மீட்டு எழுவதற்கு பலவித நடவடிக்கைகைள் மேற்கொள்ளும். அது குளிர்பான நிறுவனமாக இருந்தாலும் சரி, ராக்கெட் விற்பனை செய்யும் நிறுவனமாக இருந்தாலும் எந்த மட்டத்திலும் இறங்கி தனக்கு தேவையானதை சாதிக்கும்.

அந்த வகையில் தான் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சககத்திடம் மாஸ்டர் கார்டு நிறுவனம் புகார் கொடுத்துள்ளது. அதில் மோடியின் முயற்சியால் ரூபே கார்டு பிரபலமடைவதாகவும், தங்கள் நிறுவனம் நஷ்டம் அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் மாஸ்டர் கார்டு துணை அதிபர் ஸாரா இங்கிலீஷ் இந்த விவகாரம் தொடர்பாக ட்ரம்புக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதன் காரணமாக அமெரிக்க அரசு இந்திய அரசுக்கு அழுதம் கொடுத்துள்ளது. இன்னொருபுறம் மார்ஸ்டர் கார்டு நிறுன அதிபர் மற்றும் செயல்பாட்டு அதிகாரியான அஜய் பாங்கா இந்தியாவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் பாலிவுடன் நடிகர் மூலம் மாஸ்டர் கார்டை இந்தியாவில் பிரபலப்படுத்தும் முயற்சியும் நடக்கிறது. இதே போன்ற முயற்சிகளில் விசா கார்டும் ஈடுபட்டுள்ளது .

இந்த புகார் மோடியின் ராஜதந்திரம் என்றும், ரூபே கார்டின் வளர்ச்சி அபாரம் என்று இந்தியர்களுக்கு மமதையை தந்தாலும், உண்மையில் ரூபே கார்டு புற்றுநோய் தாக்கிய நோயாளியைப் போலவே உள்ளது.

புற்றுநோய் தாக்கிய நோயாளி பார்க்க நன்றாகத்தான் இருப்பார். நோய் முற்றி வெடிக்கும் போதுதான், அவருக்கு புற்றுநோய் இருந்ததா என்றே தெரியவரும்.

அதே போலதான் ரூபே கார்டின் வளர்ச்சியும் வெளியே பார்க்க சிறப்பாக தோன்றினாலும், வங்கி தலைவர்களும், நிதித்துறை அமைச்சகத்தினரும் ரூபே கார்டு வளர்ச்சியில் புற்றுநோய் கிருமியை உட்செலுத்தி உள்ளனர்.

விசா,கார்டு மாஸ்டர் கார்டு வைத்திருப்பர்கள் ரூபே கார்டு பெற விண்ணப்பித்தால் வங்கிகள் அதை அனுமதிப்பதில்லை. வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தான் கடிதம் எழுதி பெற வேண்டும் என்கிறார்கள். மேலும் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விசா, மாஸ்டர் காடுகளில் பொருட்கள் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் கவலைப்படுவதில்லை. ஆனால் ரூபே கார்டில் குறிப்பிட்ட அளவிற்கு கட்டாயம் பொருங்கள் வாங்க வேண்டும். அவ்வாறு வாங்காவிட்டால் அதற்கு அபராதம் விதிக்கப்படும்.

அதாவது வாடிக்கையாளர்களே ரூபே கார்டு வேண்டாம் என்று ஓடிவிட வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் அருமையான நோக்கம். இதற்கு வங்கித் தலைவர்கள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கவனிக்கப்பட வேண்டிய விதத்தில் கவனிக்கப்படுவார்கள்.

நம் வங்கியாளர்களின் நேர்மை பற்றிதான் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையிலேயே தெரிந்ததே. வெறும் 10 நோட்டு மாற்றியவனிடம் சட்டம், சவடால் பேசிய வங்கியாளர்கள், டன் டன் ஆக பழைய ரூபாய் நோட்டுக்க.ளை மாற்றி கொடுத்தனர். புதிய ரூபாய் நோட்டுகள் அனைத்தும் மடை மாற்றம் செய்யப்பட்டன. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வந்தால், சங்கம், சிண்டிகேட் என்று சேர்ந்து கொண்டு மத்திய அரசையே முடக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதன் காரணமாக மத்திய அரசு இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை.

சுந்திரத்திற்கு முன்பு கப்பலோட்டிய தமிழன் வஉசி சுதேசி கப்பல் ஓட்டியதைப் போல, பிரதமர் மோடி ரூபே கார்டு போன்று பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் நாம் வஉசி காலத்தில் அவருக்கு உதவி செய்யாமல் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டு, தற்போது அவர் தியாகத்தை பூப்போட்டு கொண்டாடுகிறோம் அல்லவா அதற்கு சற்றும் குறையாமலே தற்போது வாழ்கிறோம். இந்த காலத்தில் ரூபே கார்டு போன்ற திட்டங்களை வெற்றி அடைய செய்யாமல், யாரோ சிலர் லஞ்சம் பெற்று தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறோம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து உண்மை வெளி வரும் போது நாம் உச்சு கொட்டுவோம். அப்போது நாம் உதவி செய்ய நினைத்தாலும் அதற்கான தேவை இருக்காது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.