• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

காந்தி, நேரு மட்டும் தான் சுதந்திர போராட்ட தியாகிகளா? உண்மையை அறிவோம் !

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 08 Dec, 2018 08:43 pm

veer-savarkar-s-apology-letter-special-story

வீர் சாவர்க்கார் அவர்களின் சுதந்திரப் போராட்டத் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் அவர் அந்தமான் சிறையில் வெள்ளைக்காரனிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து கெஞ்சினார். அவரொரு கோழை என்பதாகப் பலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள். பின்னணி என்னெவென்று பார்ப்போம்.

ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியைத் தக்க வைக்க வீர் சவார்கர் எத்தனை பெரிய இடைஞ்சலாக கருதியிருந்தால், அவரை அந்தமான் சிறையில் தனிமைச் சிறையில் வைத்து கடுங்காவல் காத்திருப்பார்கள்? எத்தனை ஆத்திரம் இருந்திருந்தால், சாக்குத் துணியில் உடை கொடுத்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே மலஜலம் கழிக்க அனுமதித்து,, இரும்புச் சங்கிலியால் கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் செக்கிழுக்க வைத்து, உடல்மனரீதியாக உருக்குலைத்திருப்பார்கள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க முடிந்தால், வீர் சாவர்க்கரின் தேசப்பற்றினையும், தேசத்திற்கு அவர் செய்த தொண்டினையும் புரிந்து கொள்ளலாம். 

இந்தச் சூழலில் வீரமும் மானமும் பெரிது என்று ஆங்கிலேயனின் கொடுமைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு சாகும் வரை அங்கேயே இருந்திருக்க வேண்டும் என்று சாவர்கர் எதிர்ப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் போல. இப்படி எழுதுபவர்கள் மீது ஓர் அவதூறு வழக்கு போட்டால், வழக்கைக் கோர்டில் எதிர்கொள்ளத் துணியாமல் சமாதானத் தூது அனுப்பும் சூரர்கள் தான் இவர்கள். அல்லது வழக்குத் தொடுக்கப் போவதாகத் தெரிந்தாலே ஆண்டிஸிபேட்டரி பெயில் வாங்க உயர்நீதி மன்றம் ஓடும் வீரர்கள். 

கடிதத்தில் அவர் குறிப்பிட்டது என்ன? 1914ல் முதலாம் உலகப் போர் முடிவுற்றவுடன், பல நாடுகள் தங்கள் சிறையிலிருந்த அரசியல் கைதியை விடுவித்தன. குறிப்பாக அயர்லாந்தும் (அயர்லாந்தும் இங்கிலாந்தும் கிட்டத்தட்ட ஒன்று ) அந்தமானில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். என்னை விடுவிக்காவிடினும் மற்ற அரசியல் கைதிகளை விடுவித்தால் கூட என்னை விடுவித்ததாக மகிழ்வேன் என்று கோரிக்கை வைக்கிறார். ( சாவர்க்கர், பக் – 187) அதாவது, அது அவருக்கான கோரிக்கையே இல்லை. அங்கேயும் சக போராளிக்காக கோரிக்கையை முன் வைக்கிறார்.

அதன் பிறகு, 1920ல், ஆளுனருடனான ஓர் ஒப்பந்தத்தில், “ என்னை விடுவிக்க வேண்டும், விடுவித்த பின் நான் அரசியல்களத்தில் இருக்கக் கூடாது என்று நீங்கள் உத்தரவு போட்டால், நான் சமூகத் தொண்டும், இலக்கியம் படைப்பதிலும் ஈடுபடுவேன்” (சாவ்ர்க்கர், பக் – 46) என்று அழுத்தமாகச் சொல்கிறார். சாவர்கர் போன்ற அரசியல் கைதிகளை அவ்வளவு சும்மா விட்டுவிடுவார்களா ஆங்கிலேயர்கள்? மீறி அரசியலுக்குள் நுழைந்தால் மீண்டும் வாழ்நாள் முழுவதும் அந்தமான் சிறையில் வாசம் செய்ய ஒப்புக் கொள்கிறேன் என்று நிபந்தனையை ஏற்றுக் கொண்ட பிறகு தான் அனுப்பி வைத்தார்கள். 

ஒரு விஷயத்தை எதார்த்தமாக யோசிப்போம். இனி வெளியே வரவே முடியாது. அப்படியே வந்தாலும் அந்தமான் தீவினைக் கடந்து வேறெங்கேயும் தப்ப முடியாது. கடைசிவரை கொடும் தண்டனையை அனுபவித்து அங்கேயே சாகவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனும் போது, இப்படியான ஒரு நிபந்தனைக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டு விடுதலையாகி வருவதில் என்ன தவறு? சிறைக்குள் இருந்து கொண்டே விடுதலைக்காகப் போராட முடிந்திருக்குமானால், சாவர்க்கர் மட்டுமல்ல வேறு பல விடுதலைப் போராட்ட வீரர்களும் வெளியே வர வேண்டும் என்று கூட யோசித்திருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் சிறையில் சந்தித்த துன்பங்களுக்குச் சற்றும் குறையாத பல துன்பங்களை அடிமைத்தளையிலிருந்த பாரதத்தில் அனுபவித்து வந்தனர். சிறையை விட்டு வெளியே வந்து யாரும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படவில்லை.

வெளியே வந்த சாவர்க்கர்,  சும்மாவா இருந்தார்? நேரடியாக அரசியலில் நுழையாமல், ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். எங்கெங்கே ஹிந்துக்கள் எவ்வளவு இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்களை ஹிந்துக்கள் முன்வந்து கொடுக்கச் சொல்லி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன் பலன் பின்னாட்களில் எத்தனை தூரம் பயன்பட்டது என்று சமூக ஆய்வாளர்கள் பலர் கட்டுரையாக எழுதியிருக்கின்றனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.