விவசாயக் கடன் தள்ளுபடி காங்கிரஸின் இரட்டை துரோகம்...!

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 14 Dec, 2018 01:07 pm
farmer-s-loan-another-face-of-congress

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்.  ஆகையால் விவசாயத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டியது தான். ஆனால், அதற்கும் ஓர் எல்லை உண்டு.

சில பறவைகள் பல நூறு ஆயிரம் மைல்கள் பறந்து வேறொரு இடத்தில் முட்டை போட்டு குஞ்சு பொறித்துச் செல்வதைப் பார்த்த போது, அடடா அந்தந்த நாட்டு அரசாங்கமே இந்தப் பறவைகளைப் பிடித்து நல்ல கூடு கட்டிக் கொடுத்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்க வசதி செய்து கொடுக்கலாமே என்று சிறு வயதில் தோன்றியது. 

பின்னாளில் மரபியல் ஆய்வாளர்கள் இது குறித்து எழுதியதைப் படித்த பின் தான் மனிதன் எத்தனை தூரம் தன் சந்ததிகளை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. இப்படி பல நூறு மைல்கள் உண்ணாமல் உறங்காமல் ஓய்வில்லாமல் பறந்து வரும் பறவைகளின் மரபணு தான் அதனைவிட திறன்வாய்ந்த சந்ததிகளைப் பெருக்க முடியும். திறன் குறைந்த சந்ததியை ஈன்றெடுப்பது இயற்கைக்கு முரணானது. 

விவசாயிகளுக்கு நாமோ அரசோ செய்ய வேண்டிய உதவி, அவர்களது துறையில், நவீன மாற்றத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பயிற்றுவிப்பதாகத் தான் இருக்கணும். காலகாலமாக தன் மண்ணில் உழுது பொன் விளைவிக்கத் தெரிந்த விவசாயிகளால் தற்போது தனக்குத் தேவையானதை ஈட்ட முடியாமல் போனது ஏன் என்ற காரணியைக் கண்டுபிடித்துக் கலைய வேண்டும். அதை விட்டுவிட்டு சலுகை, மானியம், கடன் தள்ளுபடி என்பதெல்லாம் அவர்களின் திறனை மழுங்கடிக்கும் வேலையாக அமைந்து விடும். ஒரு நல்ல தலைவன், தன் மக்களின் திறனை வளர்த்து அதன் மூலம் நாட்டின் வருவாயைப் பெருக்க வேண்டுமே தவிர, ஒரு சாரார் ஈட்டும் பொருள் மற்றொரு சாராருக்கு அனாவசியமாகச் சென்றடையச் செய்யக் கூடாது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று ஆசை காட்டி அப்பாவி மக்களை ஓட்டுப் போடச் செய்யும் உத்தி தான் விவசாயிகளை இந்த நிலைக்குத் தள்ளிய முதல் காரணியாகும். மத்தியப்பிரதேசத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  விவசாயக் கடன் தள்ளுபடி என்று விழுந்து விழுந்து பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சியினால், நாட்டிற்கு நிஜமான வளர்ச்சி கிடைக்கப் போவதில்லை என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். அதுவும் பத்தே நாட்களில்  விவசாயக் கடன் தள்ளுபடி செய்வோம் என்று ராகுல் காந்தி விரல் விட்டு எண்ணிக் காட்டியது, நாட்டிற்குச் செய்யும் மிக மோசமான துரோகம். இப்பொழுது கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வாகாது என்று திடீரென்று புத்தி வந்திருப்பதைப் பாராட்டித் தான் ஆக வேண்டும் என்றாலும், ஓட்டரசியலுக்காக காங்கிரஸ் கட்சி எந்த மட்டத்திலும் இறங்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

காங்கிரஸைப் பொருத்தவரை தேச வளர்ச்சியென்பது எப்பொழுதுமே மூன்றாம்பட்சம் தான். விவசாயக் கடன் தள்ளுபடி எனப் பிரசாரம் செய்ததன் விளைவாக, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் விவசாயக் கடன் செலுத்துவோரின் எண்ணிக்கை பத்து சதவீதம் குறைந்திருக்கிறது. இது வங்கிகளின் நிர்வாகமே அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படி வங்கிகளின் பணத்தை வாரி இறைத்ததன் பலனாக, வாராக்கடன் சுமையில் பல வங்கிகள் மூடும் நிலையில் இருக்கிறது. இந்தச் சூழலில் வெறும் அரசியலுக்காக கடன் தள்ளுபடி செய்வது, இலவசம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், இந்தியா இன்னொரு கிரீஸ் நாடாகி விடும். இன்றைக்கு இலவசம் வாங்கும் மக்களின் சந்ததி நாளை தெருவில் தட்டேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close