கனவு கலைந்த நாயகர்கள்...!

  பாரதி பித்தன்   | Last Modified : 15 Dec, 2018 10:21 am
precautions-for-2019-election

மன்மோகன் அரசு மீது இருந்த வெறுப்பு, காரணமாக குஜராத் முதல்வராக இருந்த மோடியை நல்ல மேய்ப்பனாக அடையாளம் காட்டியது. இதனால் நாடு முழுவதும் பாஜக 31 சதவீதம் வாக்குகள் பெற்று 282 இடங்களை பிடித்தது. அதன் பின்னர் அமித்ஷா மோடி கூட்டணி தொடர்ந்து வந்த சட்டசபைத் தேர்தல்களி்ல வெற்றி பெற்று காங்கிரஸ் இல்லாத தேசம் என்ற நிலையை நோக்கி நகர்ந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பிரிந்து கிடந்து எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்தனர். ஆட்சியின் தொடக்கத்தில் கனவு நாயகனாக உயர்ந்த மோடி, ஜிஎஸ்டி, ரூபாய் மதிப்பு இழப்பு போன்ற பல நிலைப்பாடுகளில் மக்களிடம் செல்வாக்கு இழக்க தொடங்கினார். இதை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் தேர்தல் தோல்வி நன்கு விளங்க செய்தது. இதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற அரசியல்வாதிகளைப் போலவேதான் மோடி என்ற நிலையில் தான் போட்டியிட வேண்டி உள்ளது.

பாஜகவின் இளைஞர் அணியில் பொறுப்பு வகித்த போதே மோடியுடன் நெருக்கமான அமித்ஷா 2013ம் ஆண்டே லோக்சபா தேர்தல் பணியாற்ற தொடங்கிவிட்டார். அவரின்  ஓராண்டு கால உழைப்பின் காரணமாக மிக பிரபலமாக இருந்த மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ளி உபி மாநிலத்தில் 80 லோக்சபா தொகுதியில் 71 இடங்களை கைபற்றியது. அதன் பின்னர் தொடர்ந்து சட்டசபைத் தேர்தலில் பெற்ற வெற்றி அவரை தேர்தல் நாயகனாகவே வெளிப்படுத்தியது. அதே நேரத்தில் மோடி, அமித்ஷா கூட்டணி பாஜவின் வேர் போன்று இருந்த அத்வானி,மற்றும் யஷ்வன்சின்ஹா, அருண்ஷோரி போன்ற தலைவர்களை ஓரம் கட்டியது. இவர்கள் நடவடிக்கை பிடிக்காமல் விஎச்பி தலைவர் பிரவின் தொகாடியா அந்த அமைப்பை விட்டு வெளியேறியது போன்றவை அமித் ஷாவின் நடவடிக்கைகள் சந்தேகப்பட வைத்தது. அதன் உச்சமாக 5 மாநில தேர்தல் முடிவுகள் குறிப்பாக 3 மாநிலங்களில் பாஜ தோல்வி உள்ளது. அமித்ஷாவின் பலம் குறையத் தொடங்கி உள்ளதையே காட்டுகிறது. அதை விட அவரின் அரசியல் நிலைப்பாடுகளை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை எழுப்பி உள்ளது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கு முன்புவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இணைந்து 22 இடங்களில் பாஜக அதன் கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் எதிர்கட்சிகள் ஒன்று இணைந்தால் தான் பாஜகவை வெற்றி பெற முடியும், அதன் மூலம் நாடு ஒரு கட்சியின் ஆட்சிக்குள் வருவதை தடுக்க முடியும் என்ற யதார்த்தம் ஏற்பட்டது.

இதை உணர்ந்ததும் மம்தா களம் இறங்கி, நாடுமுழுவதும் உள்ள எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார். குறிப்பாக திரிபுரா தேர்தலில் பாஜ வெற்றி மம்தாவின் 3 அணி அமைக்கும் முயற்சியை வேப்படுத்தியது. சொந்த மாநிலத்தில் காங்கிரஸ், இடது சாரிகளுன் இணைந்து பணியாற்ற முடியாத மம்தா மற்ற மாநிலங்களில் அந்த முயற்சியை தொடங்கினார். அவர் காங்கிரஸ், பாஜ இல்லாத அணி என்ற .கோஷத்தை முன்வைத்துள்ளார். ஆனால் அது சரியான பலன் தராத நிலையில் மம்தா யாதார்த்தை புரிந்து கொண்டு அமைதியாகிவிட்டடார்.

அடுத்து சந்திரசேகரராவ் களம் இறங்கி தனது முயற்சியை தொடங்கினார். இவருக்கு மம்தாவின் ஆசியும் இருந்தது. மற்ற கட்சிகளும் சந்திரசேகரராவ் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்தன. அவர் தெலுங்கானாவில் தன் வாரிசை முதல்வராக அமர்த்திவிட்டு தேசிய அரசியலில் அடியெடுத்து. வைக்க நினைத்தார். ஆனால் பாஜ உடன் அவர் கொண்ட மென்மையான உறவு மற்றவர்களுக்கு நம்பிக்கை இழப்பை ஏற்படுத்தியது.  தற்போது தெலுங்கானாவில் பெற்ற வெற்றி அவரை முதல்வராக அமர்த்தி உள்ள சூழ்நிலையில் வரும் 2019ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் பதவியை பிடிக்கும் அவர் கனவுக்கு செக் வைத்துள்ளது. இதன் காரணமாக அவர் மீண்டும் யாராவது 3 அணி தொடங்கினால், அதற்கு ஆதரவு கொடுப்பாரே தவிர்த்து தான் தலைமை ஏற்பது யாதார்த்தமாக நடக்காது.

அதுத்து களம் இறங்கி பரிசோதனை முயற்சியிலும் தெலுங்கானாவில் அரங்கேற்றியவர் சந்திரபாபு நாயுடு. அவர் திமுக உட்பட பல கட்சிகளைத்தொடர்பு கொண்டு மாற்று அரசியல் பாதைக்கு வித்திட்டார். தேவை ஏற்பட்டால் தானே பிரதமராகிவிடலாம் என்ற அவரது மறைமுக ஆசை சந்திரபாபுநாயுடுவை மிக வேகமாக அடியெடுத்து வைக்க துாண்டியது.

ஆனால் தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை. பலத்த தோல்வியாக அமைந்ததால் அவரின் பிரதமர் உள்ளிட்ட 3 அணி கனவை கலைத்துவிட்டது.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் இந்தியாவிற்கு சரியான வழிகாட்டுவதற்கு பதிலாக பல நாயகர்களின் கனவை கலைத்துவிட்டது .மீண்டும் யார் எழுகிறார்கள் என்பதை வரும் காலம் தான் அடையாளம் காட்ட வேண்டும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close