ஆற்காட்டாராக மாறும் அருண்ஜேட்லி...!

  பாரதி பித்தன்   | Last Modified : 15 Dec, 2018 12:39 am
arun-jaitley-as-arcot-veerasamy

திமுகவின். பொற்கால ஆட்சி சட்டசபைத் தேர்தல் மூலம் முடிவுக்கு வந்ததில் ஆற்காடு வீராசாமிக்கு மிகப் பெரியபங்கு உண்டு. அந்த காலகட்டத்தில் திமுக செய்த அனைத்தையும் மீறி மக்கள் மனதில் தமிழகத்தை இருளகமாக மாற்றிய ஆற்காடு வீராசாமியின் சாதனை தான் மனதில் நின்றது. மின்தடை பிரச்னை தொடங்கிய போதே அவரை அமைச்சர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு இளம் அமைச்சர் ஒருவரை நியமித்து பிரச்னையை சரி செய்து இருந்தால் ஆட்சி தொடர்ந்து இருக்கும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அவரை திமுக தாங்கி பிடித்துக் கொண்டிருந்தால் திமுக ஆட்சிக்கு அவர் முடிவுரை எழுதினார். அதே நிலையில் தான் மத்திய அரசின் அருண்ஜெட்லியும் இருக்கிறார்.

பாராளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பே அருண்ஜேட்லிக்கு முக்கிய பதவி கொடுப்பேன் என்று மோடி உறுதியளித்தார். அதே போல பாஜ வெற்றி பெற்றதும் அவருக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்தார்.

அன்றில் இருந்து இன்று வரை மத்திய அரசில் மோடிக்கு அடுத்து அதிகம் விமர்சனம் செய்யப்பட்டவர் அருண்ஜேட்லி. ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்கள் ரகுராம்ராஜன், உர்ஜித்பட்டேல், அரவிந்சுப்பிரமணியம், சுப்ரமணியன்சாமி, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா என்று அருண்ஜெட்லியை விமர்சனம் செய்வதர்கள் பட்டியல் மிக நீளம்.

இவர்களில் சுப்ரமணியன்சாமி தொடக்கத்தில் இருந்தே அருண்ஜேட்லியை விமர்சனம் செய்து வந்தார். அவர் சகுனி என்று ஜேட்லிக்கு  பெயர்வைத்து விமர்சனம் செய்தார். மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் நிதி அமைச்சர் ஜேட்லியின் வேலையில் திருப்தி இல்லை என்று அவர் கூறி உள்ளார். சுவாமியின் விமர்சனங்கள் மத்திய அரசின் மீது கறுப்பு நிழல்படிய செய்யும் என்ற கருத்து முன்வைக்கப்படும் போது கூட அவர் அதைப்பற்றி கவலைப்படாமல் விமர்சனம் செய்து வந்தார்.

அருண்ஜேட்லி பற்றி யஷ்வந்த் சி்ன்ஹா எழுதிய கட்டுரையில், இந்திய பொருளாதாரத்தை சிதைத்தவர் அருண்ஜேட்லி, அவர் இன்னும் உண்மை பேசாவிட்டால் தேசிய கடமைகளில் இருந்து தவறுவார்கள். அவர் கச்சா எண்ணை விலை குறைந்த சூழ்நிலையை பயன்படுத்த தவறி விட்டார் என்றே குறிபிபிட்டுள்ளார்.

முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை இந்தியாவின் வளர்ச்சியை பாதித்துவிட்டது. தற்போது இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமமாக உள்ளது. இது போதாது. 2017ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது, ஆனால் இந்திய பொருளாதாம் தோல்வி அடைந்தது என்றார்.

அதே போல நிதி அமைச்சகத்திற்கும் உர்ஜித்பட்டபடேலுக்கும் இடையே உபரி நிதி பற்றிய முரண்பாடு ஏற்பட்டு கடைசியில் அவர் ரிசர்வ் வங்கி ஆளுனர் பொறுப்பையே ராஜிமாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதும் கூட பொதுவெளியில் பாஜ அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி, சர்வாதிகாரம் போன்ற தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் நிதிதுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகிறார்கள். இது பொதுவெளியில் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகிறது.

பத்து பேர் சேர்ந்து எதிர்த்தால் அவர் பலசாலியா, அல்லது பத்துபேர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பதில் எது உண்மை என்பதை மத்திய அரசு மீண்டும் அடுத்த தேர்தலில் தொடர வேண்டும் என்றால் மோடி கண்டறிந்து சரி செய்ய வேண்டும். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close